லியோ சாதனை முறியடித்த கூலி திரைப்படம்... விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்
கூலி திரைப்படத்திற்கான நான்கு நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளன.
தமிழ் சினிமாவின் மாபெரும் நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகியுள்ள "கூலி" திரைப்படம் ஆகஸ்ட் 14 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படம் தமிழ் சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது மட்டுமல்லாமல், பான்-இந்திய அளவில் பல மொழிகளில் வெளியாகி, உலகளாவிய ரசிகர்களை கவரும் வகையில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது.
கூலி" திரைப்படத்தில் ரஜினிகாந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் நாகார்ஜுனா (சைமன் என்ற கதாபாத்திரத்தில்), உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், சௌபின் ஷாஹிர் (தயாள் என்ற கதாபாத்திரத்தில்), மகேந்திரன், மற்றும் பகத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இதையும் படிங்க: #வானிலை நிலவரம்: லிஸ்டில் உங்க மாவட்டம் இருக்கா? செக் பண்ணிக்கோங்க...
மேலும், பாலிவுட் நடிகர் ஆமிர் கான் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார், இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது, தயாரிப்பாளராக கலாநிதி மாறன் பணியாற்றியுள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கதை மற்றும் திரைக்கதையையும் எழுதியுள்ளார். ஒளிப்பதிவாளராக கிரிஷ் கங்காதரனும், படத்தொகுப்பாளராக பிலோமின் ராஜூம், இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தரும் பணியாற்றியுள்ளனர்.
கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தியாவில் தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்குகிறது, அதே சமயம் கேரளா மற்றும் கர்நாடகாவில் காலை 6 மணிக்கு சிறப்பு காட்சிகள் திரையிடப்படுகின்றன.
வெளிநாடுகளில், அமெரிக்காவில் இந்திய நேரப்படி அதிகாலை 4 மணிக்கும், இங்கிலாந்தில் அதிகாலை 5 மணிக்கும், துபாயில் காலை 9:30 மணிக்கும் முதல் காட்சிகள் தொடங்குகின்றன.
இந்த நிலையில் கூலி திரைப்படத்திற்கான முதல் நான்கு நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துள்ளன. சென்னை உள்ளிட்ட நகரங்களில் டிக்கெட் விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே விற்று தீர்ந்துள்ளது.
லியோ திரைப்படத்திற்கான டிக்கெட்டுகள் மூன்று நாட்களுக்கு விற்று தீர்ந்த நிலையில், இந்த சாதனையை முறியடித்து நான்கு நாட்களுக்கான டிக்கெட் விற்பனை தீர்ந்துள்ளது. 900 திரைகளில் ஜெயிலர் திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டு இருந்த நிலையில், 1000 திரைகளில் கூலி திரைப்படம் வெளியாக உள்ளது.
இதையும் படிங்க: வீட்டுக்கு அனுப்புவாங்க... ரெடியா இருங்க! திமுகவை விமர்சித்த அதிமுக