×
 

நான் ஜென்Z தலைமுறை! லடாக்கில் ராணுவ வீரர்களிடம் வாக்குவாதம் செய்த பெண்! தவறை உணர்ந்து மன்னிப்பு கோரினார்!

நாட்டின் எல்லைப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களிடம் மரியாதையற்ற வகையில் நடந்து கொண்டதாக சமூக வலைதளங்களில் கண்டனங்கள் பதிவாகின.

பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த லடாக் பகுதியில் பணியில் இருந்த ராணுவ வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளம்பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பல்வேறு தரப்பினரிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் தனது பேச்சால் யாருடைய மனமும் புண்பட்டிருந்தால் மன்னிக்குமாறு அந்தப் பெண் வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார்.

இந்தச் சம்பவம் கடந்த ஜூலை 26-ம் தேதி கார்கில் தினத்தை முன்னிட்டு போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருந்தபோது நடைபெற்றதாக கூறப்படுகிறது. மினிமார்க்-ஜோஜிலா-சோன்மார்க் சாலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக வாகனங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்ததால் பயணிகள் பல மணி நேரம் காத்திருந்தனர்.

அப்போது சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண், அங்கிருந்த பாதுகாப்புப் படை வீரர்களிடம் சாலை ஏன் திறக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பினார். நீண்ட நேரமாக காத்திருப்பதாகவும், தாங்கள் “ஜென் Z தலைமுறை” என்பதால் இதுபோன்ற சூழ்நிலையை ஏற்க முடியாது என்றும் கோபமாக பேசியதாக வீடியோவில் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க: "2வது சுதந்திரப் போராட்டத்துக்கு தயாராகுங்கள்".. சோனம் வாங்சுக்கின் பரபரப்பு அழைப்பு..!!

இந்தக் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவியதும், பலரும் அவரது பேச்சை விமர்சித்தனர். நாட்டின் எல்லைப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களிடம் மரியாதையற்ற வகையில் நடந்து கொண்டதாக சமூக வலைதளங்களில் கண்டனங்கள் பதிவாகின.

இதையடுத்து அந்த இளம்பெண் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு மன்னிப்பு கேட்டார். இந்திய ராணுவத்தை மிகவும் மதிப்பதாகவும், பல மணி நேரம் காத்திருந்ததால் ஏற்பட்ட கோபத்தில் சில தவறான வார்த்தைகளை பயன்படுத்திவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். ராணுவத்தை அவமதிக்கவோ அல்லது சமூக வலைதளங்களில் பிரபலமாகவோ தனது நோக்கம் இல்லை என்றும் விளக்கம் அளித்தார்.

லடாக் போன்ற எல்லைப் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில், ராணுவ அணிவகுப்பு அல்லது உயர் அதிகாரிகளின் பயணம் காரணமாக சாலைகள் தற்காலிகமாக மூடப்படுவது வழக்கமான பாதுகாப்பு நடைமுறையாகும். கார்கில் போரின் நினைவு நாளை ஒட்டி இந்தச் சம்பவம் நடைபெற்றதால், இணையத்தில் இது கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: இன்று டிஸ்சார்ஜ் ஆகிறார் சோனம் வாங்சுக்! லடாக் திரும்பும் முன் ராஜ்காட்டில் முக்கிய நிகழ்வு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share