×
 

பாகிஸ்தானில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு..! இந்திய ராணுவத்தின் தரமான சம்பவம்..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில் பாகிஸ்தானின் லாகூர் மற்றும் கராச்சியில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தானின் லாகூர் விமான நிலையம் அருகே உள்ள கோபால் நகர், நசீரா பாத் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் குண்டுவெடிப்பு பல அடி உயரத்திற்கு கரும்புகள் எழுந்தவுடன் வெளி சட்டங்கள் கேட்டதால் மக்கள் வீதி அடைந்தனர்.நடந்தது. அங்கு பல அடி உயரத்துக்கு கரும்புகை எழும்பியது. அடுத்தடுத்து பலத்த சத்தங்கள் கேட்டதால் மக்கள் கடும் பீதியடைந்தனர்.

மேலும் அபாய ஒலி எழுப்பப்பட்டதால் மக்கள் அவசரமாக வீடுகளை விட்டு வெளியேறினர்.  லாகூரில் குண்டு வெடிப்பு நடந்ததை போலீசார் உறுதி செய்த நிலையில், கராச்சி விமானநிலையத்திற்கு அருகிலும் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், லாகூர் மற்றும் இஸ்லாமா பாத் விமான நிலையங்களில் உள்ள அனைத்து வணிக விமானங்களுக்கும் நாட்டின் வான்வெளி மூடப்பட்டுள்ளது என்று தெரிவித்தது.

இதையும் படிங்க: பாகிஸ்தானில் இருந்து ஊடுருவியவர் சுட்டுக்கொலை! மர்ம பொருளை கைப்பற்றிய எல்லை பாதுகாப்பு படையினர்...

இதனிடையே, கராச்சி மற்றும் பிற பாகிஸ்தானிய நகரங்களைத் தாக்க இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட ஹரோப் ட்ரோன்களை இந்தியா பயன்படுத்தியதாக பாகிஸ்தான் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கராச்சி உட்பட 9 இடங்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதாக அந்நாட்டின் டிஜி ஐஎஸ்பிஆர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீஃப் கூறி உள்ளார்.

இதையும் படிங்க: வாலாட்டும் பாகிஸ்தான்.. இனி ஒத்த உசுரு போகக் கூடாது..! மக்களை இடமாற்றும் ராணுவம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share