பாக்.-ல் இருந்து ஊடுருவியவர் சுட்டுக்கொலை..! மர்ம பொருளை கைப்பற்றிய எல்லை பாதுகாப்பு படையினர்..!
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற நபரை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.
பாகிஸ்தானில் இருந்து பஞ்சாபின் பெரல்பூர் எல்லை வழியாக இந்தியாவிற்குள் ஒருவர் ஊடுருவ முயன்றுள்ளார். வேண்டுமென்றே சர்வதேச இந்திய எல்லைக்குள் வர முயன்றதாக கூறப்படுகிறது. பாதுகாப்பு வேலிகளை அகற்றி இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற போது எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். மேலும் அந்த நபரின் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த நபரின் உடல் பஞ்சாப் போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டதாக எல்லை பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரிடம் கவரில் இருந்த பொருளும் தற்போது பஞ்சாப் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த நபர் யார்? அந்த கவருக்குள் இருந்த பொருள் என்ன? என்பது குறித்து பஞ்சாப் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: வாலாட்டும் பாகிஸ்தான்.. இனி ஒத்த உசுரு போகக் கூடாது..! மக்களை இடமாற்றும் ராணுவம்..!
எதற்காக இந்த நபர் ஊடுருவு முயன்றார் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. ஆனால், அவர் தவறுதலாக எல்லையை தாண்டவில்லை, வேண்டும் என்றே எல்லை தாண்டி உள்ளதாக பாதுகாப்பு படை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவின் முப்படைகளும் தயார்..! பாகிஸ்தானை பதம் பார்க்க காத்திருக்கும் வீரர்கள்..!