×
 

பாடகி ஆஷா போஸ்லேவுக்கு மாரடைப்பு! கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!

பிரபல பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லேவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதி.

பிரபல பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92) அவர்களுக்கு இன்று (ஏப்ரல் 11, 2026) திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, அவர் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி (Breach Candy) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று மாலை சுமார் 7:30 மணியளவில் ஆஷா போஸ்லேவுக்குக் கடுமையான தலைவலி மற்றும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவருக்கு மாரடைப்பு (Cardiac Arrest) ஏற்பட்டதால், உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். 

மருத்துவமனை வட்டாரங்களின்படி, அவரது உடல்நிலை தற்போது மிகவும் கவலைக்கிடமாக (Critical) உள்ளது. அவர் தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு, வென்டிலேட்டர் (Life support) உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டாக்டர் பிரதீத் சம்தானி தலைமையிலான மருத்துவக் குழுவினர் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

ஆஷா போஸ்லேவின் உடல்நிலை குறித்துச் சமூக வலைதளங்களில் பல்வேறு செய்திகள் பரவி வந்த நிலையில், அவரது பேத்தி ஜானை போஸ்லே (Zanai Bhosle) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு முக்கியப் பதிவை வெளியிட்டுள்ளார் எனது பாட்டி ஆஷா போஸ்லே, அதீத சோர்வு மற்றும் நெஞ்சுத் தொற்றால் (Chest Infection) பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எல்லாம் நலமாக நடக்கும் என்று நம்புகிறோம். அவரது உடல்நிலை குறித்த நேர்மறையான தகவல்களை விரைவில் உங்களுக்குப் பகிர்கிறோம்.

இதையும் படிங்க: #Breaking News: வானதி சீனிவாசன் திடீர் உடல்நலக்குறைவு! மருத்துவமனையில் அனுமதி!

இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டவுடன், பாஜக எம்.எல்.ஏ மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் ஆஷிஷ் ஷேலார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று அவரது உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தார். இசைத்துறை மற்றும் திரைத்துறையைச் சேர்ந்த பல பிரபலங்களும், ரசிகர்களும் அவர் விரைவில் குணமடைய வேண்டி சமூக வலைதளங்களில் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக இசைத்துறையில் கொடிகட்டிப் பறக்கும் ஆஷா போஸ்லே, 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி உலக சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது உடல்நிலை குறித்த அடுத்தகட்ட அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கைக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இதையும் படிங்க: நெல்லையில் சிறுவனுக்கு அரிவாள் வெட்டு... +1 மாணவன் வெறிச்செயல்..!! தீவிர விசாரணை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share