×
 

பரபர பார்லி., ஒரு பக்கம் எதிர்க்கட்சிகள் போராட்டம்.. மறுபக்கம் சப்தமில்லாம் நிறைவேறும் மசோதாக்கள்!!

சுருக்கமான விவாத்திற்குப் பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் இரண்டு மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா, தேசிய ஊக்கமருந்து தடுப்பு திருத்த மசோதா ஆகியவை நிறைவேற்றப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்துல வாக்காளர் பட்டியலுக்கு சிறப்பு தீவிர திருத்தம் (SIR) செய்யப்பட்டதுக்கு எதிரா காங்கிரஸ், ஆர்ஜேடி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் கடுமையா போராடி வருது. இதன் ஒரு பகுதியா, இன்னிக்கு (ஆகஸ்ட் 11, 2025) டெல்லியில தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு பேரணியா போக முயற்சி பண்ணின எதிர்க்கட்சி எம்பிக்கள், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ், மல்லிகார்ஜூன கார்கே, சஞ்சய் ராவத் உள்ளிட்டோர் டெல்லி போலீஸால கைது செய்யப்பட்டாங்க. 

“வாக்கு திருட்டு”னு குற்றம்சாட்டி, “ஒரு மனிதன், ஒரு வாக்கு”னு முழக்கமிட்டு, பேரணியை தடுக்க முயற்சி பண்ண போலீஸ் கட்டுப்பாடுகளை மீறி, அகிலேஷ் யாதவ் தடுப்பு வேலியை தாண்டி ஏறி போராட்டம் பண்ணாரு. இந்த சம்பவம் பாராளுமன்ற வளாகத்துல பெரிய பரபரப்பை ஏற்படுத்துச்சு.

இந்த பரபரப்புக்கு நடுவுல, மக்களவையில இரண்டு முக்கிய விளையாட்டு மசோதாக்கள் நிறைவேறியிருக்கு. தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா மற்றும் தேசிய ஊக்கமருந்து தடுப்பு திருத்த மசோதா இவை. இந்த மசோதாக்களோட விவாதத்துக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் பலரும் பீகார் பிரச்சினையை முன்னிலைப்படுத்தி போராட்டம் பண்ணதால, விவாதம் சுருக்கமா நடந்து, குரல் வாக்கெடுப்பு மூலமா இந்த மசோதாக்கள் நிறைவேறின. 

இதையும் படிங்க: இந்தியாவின் மனைவி பாக்., ராஜஸ்தான் எம்.பி. கருத்தால் லோக்சபாவில் சிரிப்பலை..!

தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா: விளையாட்டு சங்கங்கள்ல வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு, வீரர்கள் நலனை மேம்படுத்துறதை நோக்கமா வச்சிருக்கு. 2036 ஒலிம்பிக்கை இந்தியாவுல நடத்துறதுக்கு தயாராகவும், இந்திய வீரர்களோட சர்வதேச பங்களிப்பை உயர்த்தவும் இது முக்கியமா இருக்கும்.

இதுக்காக தேசிய விளையாட்டு வாரியம் (NSB) அமைக்கப்படுது. இந்த வாரியம், விளையாட்டு சம்மேளனங்களை கண்காணிக்கும், விதிமுறைகளை அமல்படுத்தும். மத்திய அரசு நிதி பெறணும்னா, சம்மேளனங்கள் இந்த வாரியத்துல அங்கீகாரம் பெறணும். தேர்தல் முறைகேடு, நிதி தவறு, ஆண்டு தணிக்கை இல்லனா அங்கீகாரம் ரத்து செய்யப்படும்னு மசோதா சொல்றது. 

தேசிய ஊக்கமருந்து தடுப்பு திருத்த மசோதா, ஊக்கமருந்து பயன்பாட்டை கட்டுப்படுத்தி, சர்வதேச தரத்துக்கு ஏற்ப இந்தியாவோட விளையாட்டு சூழலை மேம்படுத்தும். இது வீரர்களுக்கு நியாயமான போட்டி சூழலை உறுதி செய்யும். இந்த மசோதாக்கள், இந்திய விளையாட்டு மேம்பாட்டுக்கு முக்கிய படியா பார்க்கப்படுது.

இதே நேரத்துல, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்னிக்கு மக்களவையில ஒரு புதிய வருமான வரி மசோதாவை அறிமுகப்படுத்தியிருக்கார். இந்த மசோதா, வருமான வரி சட்டத்தை எளிமையாக்கி, வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், வரி செலுத்துவோருக்கு சுமையை குறைக்கவும் முயற்சி செய்யுது. இதுல, வரி விகிதங்களை மறுசீரமைப்பு, சிறு வரி செலுத்துவோருக்கு சலுகைகள், டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு ஏற்ப புது விதிகள் உள்ளிட்டவை இருக்கலாம்னு எதிர்பார்க்கப்படுது.

இதையும் படிங்க: பேனா உடைஞ்சதா? பென்சில் உடைஞ்சதானு கேக்காதீங்க!! எக்சாம் ரிசல்ட் என்னானு பாருங்க!! ராஜ்நாத் சிங் நச்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share