×
 

பொறுமையை சோதித்த மின்தடை..இருளில் மூழ்கிய தூங்காநகரம்.. நள்ளிரவில் கொதித்து எழுந்த மக்கள்...!

நாங்கள் எங்கள் பகுதியில் மின் தடை ஏற்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டோம் செயற்பொறியாளர் நேரடியாக வந்தார். 

மதுரையில் கூடல்நகர் பகுதியில் இரவில் மின்தடை  சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் - போன் எடுப்பதே இல்லை என  மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள்
 மின்வாரிய அதிகாரிகளிடம் கடிதம் எழுதி வாங்கி கலைந்து சென்றனர்.

மதுரை மாவட்டம் கூடல்புதூர் பகுதியில் உள்ள ஆனையூர் துணை மின்நிலையத்தி்ல் இருந்து தினமணி நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்விநியோகம் செய்யப்படுகிறது. 

இந்நிலையில் தினமணி நகரை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும்  தொடர்ச்சியாக இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுதாகவும், இது குறித்து புகாரளித்தால் மின்வாரிய பணியாளர்கள் அலட்சியமாக இருப்பதாகவும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளதாக  கூறி தினமணி நகர் பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்ப்பட்ட  பொதுமக்கள் துணை மின் நிலையத்தின் முன்பாக நள்ளரவில் அலங்காநல்லூர் பிரதான சாலையை. மறைத்து சாலை றியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை 

இதையும் படிங்க: #BREAKING காலையிலேயே அதிபயங்கரம்... அப்பளம் போல் நொறுங்கிய கார்... 3 வயது குழந்தை உட்பட 5 பேர் உயிரிழப்பு...!

இதனையடுத்து துணை மின்நிலைய அலுவலகத்திற்கு சென்றனர் துணை மின்நிலைய  செயற்பொறியாளர் அலுவலகத்தில் வைத்து  இரவில் மின்தடை ஏற்பட்டதற்கான காரணம்,மற்றும் தொலைபேசிகளுக்கு பதிலளிப்பதாக எழுதி பெற்று கொண்டு கலைந்து சென்றனர். முன்னதாக மறியலின் போது தவெகவிற்காக ஆதரவாக பேசியவரால் சலசலப்பு ஏற்ப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், நாங்கள் எங்கள் பகுதியில் மின் தடை ஏற்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டோம் செயற்பொறியாளர் நேரடியாக வந்தார். 

 எங்கள் பகுதியில் மின் தடை ஏற்பட்டதற்கான காரணம்  ஏன் என்பது குறித்தும் இனி் இது போன்று நடக்காது இனி புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் மின்வாரிய பணியாளர்கள் உடனடியாக ரெஸ்பான்ஸ் செய்வார்கள் என்பது குறித்து கடிதம் கேட்டோம் 

அதற்கு செயற்பொறியாளர்  கடிதம் எழுதிக் கொடுத்துள்ளார் இதனை நம்பி நாங்கள் செல்கிறோம். இனியும் மின்தடை தொடர்ந்து ஏற்பட்டால் நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மாட்டோம் நீதிமன்றத்தில் சென்று பொதுநல வழக்கு தொடர்வோம் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: தென் தமிழகத்தை புறக்கணிக்காதீர்கள்! பட்ஜெட்டில் சிறப்பு நிதி கேட்கும் 11 மாவட்ட தொழில் சங்கங்கள்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share