உலகின் சிறந்த அரசுப்பள்ளி 2025: விருதை தட்டிச்சென்ற பள்ளி எது தெரியுமா..??
உலகின் சிறந்த பள்ளிக்கான (2025) விருதை, மஹாராஷ்டிரா மாநிலம் கேட் தாலுகாவில் உள்ள ஜலிந்தர் நகர அரசு ஆரம்ப பள்ளி தட்டிச்சென்றது.
மஹாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்டம் கேட் தாலுகாவில் அமைந்துள்ள ஜலிந்தர் நகர் அரசு ஆரம்பப் பள்ளி (ஜிபி ஸ்கூல் ஜலிந்தர்நகர்), 2025 உலகின் சிறந்த பள்ளி விருதுகளின் 'கம்யூனிட்டி சாய்ஸ் அவார்டு'க்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. லண்டனில் நடைபெற்ற விழாவில் இந்த விருது அறிவிக்கப்பட்டது, இது இந்திய கிராமப்புற கல்விக்கு பெருமை சேர்க்கும் சாதனையாக அமைந்துள்ளது.
T4 Education அமைப்பால் நடத்தப்படும் இந்த உலகளாவிய விருதுகள், கல்வியில் புதுமைகளை ஊக்குவிக்கின்றன. இந்தப் பள்ளி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மூன்று மாணவர்களுடன் மூடப்படும் ஆபத்தில் இருந்தது. ஆனால், தலைமையாசிரியர் தத்தாத்ரேய் வார் தலைமையில், 'சப்ஜெக்ட் ஃப்ரெண்ட் (subject friend)' என்ற மாணவர்-ஆசிரியர் மாதிரி அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், பெரிய மாணவர்கள் சிறியவர்களுக்கு பாடங்களை நடத்துவர். அதாவது மாணவர்களே ஒருவருக்கொருவர் ஆசிரியராகவும் கற்பவராகவும் மாறுகின்றனர். இதன் மூலம் வயது வேறுபாடின்றி இணைந்து கற்பது மாணவர்களின் மேம்படுகிறது. இதனால் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்து சேர்ந்தனர்.
கிராம மக்களின் ஒத்துழைப்புடன், இந்த மாதிரி சமூக ஒருங்கிணைப்பு விருதுக்கும் இறுதிப் பட்டியலில் இடம்பெற்றது. உலகின் 50 இறுதிப் பள்ளிகளிடையே நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில், இந்தப் பள்ளி அதிக வாக்குகளைப் பெற்று கம்யூனிட்டி சாய்ஸ் அவார்ட்டைத் தட்டிச் சென்றது. இதன் மூலம், இந்தியாவின் நான்கு பள்ளிகளில் (ஹரியானா, கர்நாடகா, உத்தரப் பிரதேசம் உட்பட) இது தனித்து விளங்குகிறது.
இதையும் படிங்க: அமித் ஷாவை சந்திக்கும் ஆதவ்! கொள்கை எதிரியுடன் கூட்டணியா? விஜய் முடிவால் திடீர் ட்விஸ்ட்!
விருது வென்ற பள்ளிக்கு மஹாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் வாழ்த்து தெரிவித்து, "இது மஹாராஷ்டிராவின் பெருமை. மாணவர்கள்-ஆசிரியர்கள் மாதிரி புரட்சிகரமானது" என்றார். இந்த விருது, கிராமப்புற இந்திய கல்வியின் சாத்தியத்தை உலகுக்கு காட்டுகிறது. T4 Education தலைவர் விகாஸ் போடா, "இத்தகைய பள்ளிகள் எதிர்காலத்திற்கான நம்பிக்கை" என்று பாராட்டினார்.
விருது பெற்ற பள்ளி, அபுதாபியில் நடக்கும் உலக பள்ளி உச்சி மாநாட்டில் பங்கேற்கிறது. இது, மற்ற கிராம பள்ளிகளுக்கு முன்மாதிரியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதனை, இந்திய அரசு ஆரம்பப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் புதிய ஊக்கமாக உருவெடுக்கும். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் மகிழ்ச்சி, கிராமத்தை முழுவதும் கொண்டாட்டமாக மாற்றியுள்ளது.
இதையும் படிங்க: இந்திய பணக்காரர்கள் டாப் 100! அம்பானி, அதானியின் மலைக்க வைக்கும் சொத்து மதிப்பு!