×
 

மணிப்பூர் வன்முறை விவகாரம்... NIA- வுக்கு சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு...!

மணிப்பூர் வன்முறை தொடர்பாக பதிலளிக்க NIA வுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்த மணிப்பூர் மாநிலம், அதன் அழகிய இயற்கை மற்றும் பன்முக இனக் கலந்த சமூகத்தால் அறியப்பட்டது. ஆனால், 2023 மே மாதம் 3-ஆம் தேதி தொடங்கிய இன வன்முறை, இந்த மாநிலத்தை இரண்டு ஆண்டுகளாக இருளில் ஆழ்த்தியுள்ளது. மெய்தெய் (Meitei) சமூகத்தினருக்கும் குகி-சோ (Kuki-Zo) பழங்குடி இனத்தினருக்கும் இடையிலான இந்த மோதல், நில உரிமை, அரசியல் சலுகைகள், அடையாளம் மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைப் பற்றிய ஆழமான பிரச்சினைகளை வெளிப்படுத்தியுள்ளது.

இன்று வரை 258-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள், 60,000-க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்தல், ஆயிரக்கணக்கான வீடுகள் அழிவு ஆகியவை இந்த வன்முறையின் கொடூரமான முகங்களை நினைவூட்டுகின்றன. இதனிடையே மணிப்பூர் முதலமைச்சராக இருந்து வந்த பைரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

பிரதமர் மோடி செப்டம்பர் 2025-இல் முதல் முறையாக மாநிலத்தைப் பார்வையிட்டு, அமைதி உறுதியளித்தார். நவம்பர் 2025 வரை, வன்முறை தற்காலிக அமைதியுடன் இருந்தாலும், 60,000 இடம்பெயர்ந்தோர் நிவாரண முகாம்களில் தவிக்கின்றனர். இந்த வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: மேகதாது அணை விவகாரம்... சீக்கிரம் ரெடி பண்ணுங்க..! திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகாவுக்கு அனுமதி...!

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மணிப்பூர் வன்முறை தொடர்பான விசாரணையின் தற்போதைய நிலவரம் குறித்து பதிலளிக்க தேசியப் புலனாய்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: வரலாற்று வெற்றி! பிரதமர் மோடி, நிதிஷ் குமார் மீதான நம்பிக்கையின் முத்திரை... ஜே. பி. நட்டா பெருமிதம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share