×
 

தனித்துவமான மேகாலயாவின் வாழும் வேர் பாலங்கள்..! யுனெஸ்கோவிற்கு இந்தியா பரிந்துரை..!

மேகாலயாவின் வாழும் வேர் பாலங்களை பாதுகாக்க யுனெஸ்கோவிற்கு இந்தியா பரிந்துரை செய்துள்ளது.

மேகாலயா மாநிலம் உலகின் மிக அதிக மழை பெய்யும் பகுதிகளில் ஒன்று. இங்கு அடர்ந்த மழைக்காடுகள், ஆழமான பள்ளத்தாக்குகள், வேகமாக ஓடும் ஆறுகள், செங்குத்தான மலைகள் ஆகியவை நிறைந்துள்ளன. மழைக்காலத்தில் ஆறுகள் வெள்ளமாகி, கிராமங்களுக்கு இடையேயான இணைப்பு துண்டிக்கப்படும். பழங்காலத்தில் மூங்கில் அல்லது மரத்தால் செய்த பாலங்கள் விரைவில் சேதமடைந்து விடும்.

இதனால், இயற்கையுடன் இணைந்து நிலைத்து நிற்கும் தீர்வைத் தேடிய காசி மக்கள், இந்திய ரப்பர் மரம் அல்லது டியங் ஜ்ரி என்ற மரத்தின் வான்வேர்களைப் பயன்படுத்தி பாலங்கள் உருவாக்கும் கலைத்திறனை வளர்த்தெடுத்தனர். இந்த வாழும் பாலங்கள் உருவாக்கும் முறை மிகவும் பொறுமை தேவைப்படும் ஒரு செயல்முறை. முதலில், ஆற்றங்கரையில் இரு பக்கங்களிலும் Ficus elastica மரக்கன்றுகளை நடுகிறார்கள். இந்த மரங்கள் 10-15 ஆண்டுகளுக்குப் பிறகு வான்வேர்களை விடத் தொடங்கும்.

அந்த இளம், நெகிழ்வான வேர்களை மூங்கில் துண்டுகள் அல்லது பாக்கு மரக் குழாய்களால் ஆதரவாகப் பயன்படுத்தி, ஆறு குறுக்கே எதிர்ப்பக்கத்தை நோக்கி வழிநடத்துகிறார்கள். வேர்களை ஒன்றோடொன்று பின்னி, கட்டி, இணைக்கிறார்கள். மேகாலயாவின் வாழும் வேர் பாலங்கள் இயற்கையும் மனித புத்திசாலித்தனமும் இணைந்து உருவாக்கிய அற்புதமான கட்டமைப்புகள். இவை உலகிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில், மேகாலயாவின் காசி மற்றும் ஜைன்டியா பழங்குடி மக்களால் நூற்றாண்டுகளாக உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.

இதையும் படிங்க: வரி குறைப்பு..! இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே வர்த்தக ஒப்பந்தம்…!

இவற்றை உள்ளூர் மொழியில் ஜிங்கியெங் ஜ்ரி என்று அழைக்கிறார்கள். மேகாலயாவின் இந்த வாழும் வேர் பாலங்களை 2026-27-ம் ஆண்டுக்கான உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்க இந்தியா பரிந்துரைத்துள்ளது. பரிசீலனைக்காக, அதன் பரிந்துரை ஆவணங்களை பாரீசில் உள்ள யுனெஸ்கோ அமைப்பிடம் இந்தியா சமர்ப்பித்துள்ளது.

இதையும் படிங்க: நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நாளை வேலை நிறுத்த போராட்டம்..! சேவைகள் பாதிப்பு அபாயம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share