×
 

“நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுளுடன் இருக்க வாழ்த்துகிறோம்” - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின், இபிஎஸ் வாழ்த்து...! 

பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பகிர்ந்துள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்தது:

“பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நீண்ட ஆயுளுடன் இருக்க வாழ்த்துகிறேன்” என அந்த வாழ்த்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: அமித் ஷா அப்படி என்ன சொல்லிட்டாரு... காஸ்ட்லி காரில் முகத்தை மூடியபடி எஸ்கேப் ஆன எடப்பாடி ...!

அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு தனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில், “உங்கள் தொலைநோக்குத் தலைமை, அயராத உழைப்பு மற்றும் தேசத்திற்கான உறுதியான அர்ப்பணிப்பு தொடர்ந்து மில்லியன் கணக்கானவர்களுக்கு ஊக்கமளிக்கிறது. 

உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள், மற்றும் நமது மகத்தான தேசத்தை வழிநடத்த தொடர்ந்து பலம் கிடைக்க வாழ்த்துகிறேன்” எனக்குறிப்பிட்டுள்ளார். 

இதையும் படிங்க: #BREAKING பரபரக்கும் அரசியல் களம்... டெல்லியில் அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share