×
 

இடைக்கால பட்ஜெட்..! முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம்..!

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் பங்கேற்று உள்ளனர். தமிழகத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இது ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் நடைபெறும் முக்கியமான கூட்டமாகக் கருதப்படுகிறது.

குறிப்பாக, விரைவில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ள இடைக்கால பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் இதில் மையமாக உள்ளன. இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள், செலவினத் திட்டங்கள் மற்றும் மக்களுக்கு பயனளிக்கும் புதிய அறிவிப்புகள் குறித்து ஆழமான ஆலோசனைகள் நடைபெறுகின்றன.

இந்தக் கூட்டத்தில் புதிய தொழில்துறை திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது, நலத்திட்டங்களை விரிவுபடுத்துவது, இளைஞர்கள் மற்றும் பிற பிரிவினருக்கான சிறப்புத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்படுவதாக எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் ஆண்டு என்பதால், மக்கள் நலனை மையமாகக் கொண்டு சில முக்கிய அறிவிப்புகளை அரசு தயார்படுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: தலைமைச் செயலகத்தில் பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்..! முடிவுற்ற திட்டங்களும் தொடங்கி வைப்பு..!

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் இந்த அமைச்சரவை கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு போதிய ஒதுக்கீடு இல்லை என்று முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், மாநில அரசு தனது இடைக்கால பட்ஜெட்டின் மூலம் மக்களுக்கு உறுதியான நம்பிக்கையை அளிக்கும் வகையில் திட்டங்களை வகுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இதையும் படிங்க: தேர்தல் அறிக்கை தயாரிப்பில் மும்முரம்...! களமாடும் திமுக... 2வது நாளாக கருத்து கேட்பு கூட்டம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share