×
 

விவசாயி வேஷம் போட்டு அரசியல் செய்வாங்க... விவசாய எதிர்ப்பு சட்டத்தையும் ஆதரிப்பாங்க... சூசகமாக பேசிய முதல்வர்...!

விவசாய வேஷம் போட்டுக் கொண்டு அரசியல் செய்வார்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் சூசகமாக பேசியுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு கள ஆய்விற்காக முதலமைச்சர் ஸ்டாலின் சென்று உள்ளார். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திருவண்ணாமலையில் வேளாண் கண்காட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் முடிவற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தவுடன் 314 திட்டப்பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். 46 புதிய திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டியிருக்கிறார். 2095 கோடி ரூபாய் மதிப்பிலான திட்ட பணிகளை தொடங்கி வைத்துள்ளார்.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், புதிய பயிர் ரகங்கள், புதிய கண்டுபிடிப்புகள், வேளாண் கருவிகள் போன்றவை பற்றி விவசாயிகள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் விலைப் பொருட்களை மதிப்பு கூட்டி விற்பது மற்றும் சேமிப்பது போன்றவற்றை விவசாயிகள் தெரிந்துகொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார். விவசாயிகளுக்கான கண்காட்சியில் 13 தலைப்புகளில் கருத்தரங்கு மற்றும் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

விவசாயி வேடம் போட்டுக்கொண்டு சிலர் அரசியல் செய்வார்கள் என்று விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின், விவசாயிகளை பாதிக்கிற சட்டத்தையும் அவர்கள் ஆதரிப்பார்கள் என்று சூசகமாக பேசினார். விவசாயிகளை போராட விட்டு அந்தப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவார்கள் என்றும் குற்றம் சாட்டினார். வேளாண் துறைக்கு தற்போது வரை ஒரு கோடியே 94 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். ஐந்தாண்டுகளாக மேட்டூர் அணை சரியான நேரத்தில் திறக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

இதையும் படிங்க: விவசாய திட்டங்களில் தமிழ்நாடு முன்னோடி... திருவண்ணாமலையில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்...!

பாரம்பரிய வேளாண் சாகுபடிக்கு 320 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாட்டில் 55 ஆயிரத்து 750 தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றி இருப்பதாகவும் தெரிவித்தார். திமுக ஆட்சியின் 5 பட்ஜெட்டுகளில் வேளாண்துறைக்கு ஒரு கூடிய 94 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது என்றும் முந்தைய ஆட்சியில் கண்டுகொள்ளப்படாத 125 உழவர் சந்தைகளை புனரமைத்துள்ளோம் என்றும் கூறினார். 20.84 லட்சம் விவசாயிகளுக்கு 1600 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பீடு வழங்கி இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வாக்குறுதியை நிறைவேற்ற வக்கில்ல... போராட விட்டு வேடிக்கை பார்ப்பதா? இபிஎஸ் கண்டனம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share