#BREAKING: MLA மார்க்கண்டேயனுக்கு ஜாமின்..!! நீதிமன்றம் போட்ட அதிரடி கண்டிஷன்..!
திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது. தமிழக அரசியலில் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு சம்பவம், விளாத்திகுளம் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிகழ்வு. இது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் குறித்து அவதூறாகவும் மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியதாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் நடந்தது.
கடந்த ஜூலை 18 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் திமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசிய விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அவரது பேச்சில் முதலமைச்சரை “இந்தியாவே இதுவரை பார்த்திராத இழிவான முதலமைச்சர்” என்றும், சட்டசபையைக் கூட்டினால் அவரது எலும்பை உடைப்போம் என்றும் குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதும் பெரும் சர்ச்சை எழுந்தது.இதைத் தொடர்ந்து தூத்துக்குடி தவெக வடக்கு மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியன் தரப்பில் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். நெல்லை பாளையங்கோட்டை சிறையில் எம்எல்ஏ மார்க்கண்டேயன் அடைக்கப்பட்டார். இந்த சம்பவத்திற்கு திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். பலமுறை ஜாமீன் கேட்டு மார்க்கண்டேயன் நீதிமன்றத்தில் மனு கொடுத்த நிலையில் அவை தள்ளுபடி செய்யப்பட்டன.
இதையும் படிங்க: ஈரானுடன் இன்று நள்ளிரவு மீண்டும் பேச்சுவார்த்தை! போர் நிறுத்தத்தில் முக்கிய திருப்பம்! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்!
இந்த நிலையில் முதலமைச்சரின் விஜயின் எலும்பை உடைப்பேன் என்று பேசிய திமுக எம்எல்ஏ மார்க்கண்டே எனக்கு ஒரு வழியாக நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. மார்க்கண்டேயன் தினமும் தூத்துக்குடி காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. மார்க்கண்டேயன் எதிர்காலத்தில் இப்படி பேச மாட்டேன் என உத்தரவாதம் அளித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
.
இதையும் படிங்க: கருணாநிதி திறந்த சிலை.! மாலை அணிவிக்க தயங்கும் அமைச்சர்கள்! 50 ஆண்டுகளாக ஆட்டி வைக்கும் வல்வில் ஓரி 'சென்டிமென்ட்'!