MLA பழனியாண்டி மீது FIR போடுங்க... கோர்ட்டுக்கு போவோம்... பாஜக வழக்கறிஞர்கள் மனு..!
MLA பழனியாண்டி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக அரசுக்கு மனு கொடுக்கப்பட்டு உள்ளது.
கல்குவாரி விவகாரத்தில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடுபவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். செய்தியாளர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் எம்எல்ஏ பழனியாண்டி ஆதாரத்துடன் சிக்கியுள்ளார்.
தாக்குதல் தொடர்பான ஆடியோக்கள் அவ்வப்போது வெளியாகி இருந்தன. இன்று செய்தியாளரை எம்எல்ஏ பழனியாண்டி கேமராவை பிடுங்கி தாக்க வரும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் எம் எல் ஏ பழனியாண்டி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
ஏற்கெனவே, இந்த சம்பவத்திற்கு நயினார் நாகேந்திரன், எடப்பாடி பழனிசாமி, செல்வப்பெருந்தகை, அண்ணாமலை என ஏராளமான அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து இருந்தனர். MLA பழனியாண்டியை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனிடையே, நிருபர், ஒளிப்பதிவாளரை தாக்கிய எம்எல்ஏ மீது FIR பதியக்கோரி தமிழக அரசுக்கு பாஜக வழக்கறிஞர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
இதையும் படிங்க: தொங்கியது இபிஎஸ் தலை தான்... திமுக ராணுவ கட்டுப்பாட்டோடு இருக்கு... சேகர்பாபு பதிலடி..!
MLA பழனியாண்டி மீது வழக்குப்பதிந்து குவாரி உரிமத்தை ரத்து செய்யக்கோரி பாஜக வழக்கறிஞர்கள் மணி, மோகன்தாஸ் மனு கொடுத்துள்ளார். கனிமவளக்கொள்ளை குறித்த செய்தி சேகரித்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து தமிழக அரசு, காவல்துறைக்கு விரிவான மனு அளித்துள்ளது. வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்காவிடில் நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் மனுவில் பாஜக வழக்கறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: இரத்தம் தோய்ந்த கரங்களுடன் தேர்தலை சந்திக்கும் திமுக... அஜித் கொலை விவகாரத்தில் நயினார் அதிருப்தி..!