டி.வி., லேப்டாப் இப்போவே வாங்கிக்குங்க!! 2 மாதத்தில் விலை உயரும்?! அலர்ட் ரிப்போர்ட்!
விலை உயர்வு காரணமாக மொபைல் போன்களின் விற்பனை 10-12 சதவீதம் குறையக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை: உலக அளவில் மைக்ரோசிப்கள் (செமிகண்டக்டர் சிப்ஸ்) பற்றாக்குறை தொடர்ந்து வருவதால், ஸ்மார்ட்போன், டிவி, மடிக்கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்களின் விலை அடுத்த 2 மாதங்களில் கணிசமாக உயரவுள்ளது. இதனால் ஸ்மார்ட்போன் விற்பனை 10-12 சதவீதம் வரை குறையக்கூடும் என்று தொழில்துறை வட்டாரங்கள் மதிப்பிட்டுள்ளன.
கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச் அறிக்கையின்படி, கடந்த அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் வரும் மார்ச் மாதத்திற்குள் மைக்ரோசிப் விலைகள் 120 சதவீதம் வரை உயரக்கூடும். ஏஐ (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சி, சிப் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு, உலகளாவிய சப்ளை செயின் பிரச்னைகள் ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.
இதன் தாக்கம் ஏற்கனவே தொடங்கிவிட்டது. பல முன்னணி ஸ்மார்ட்போன், டிவி, லேப்டாப் நிறுவனங்கள் தள்ளுபடி, கேஷ்பேக் சலுகைகளை குறைத்து வருகின்றன.
இதையும் படிங்க: அடுத்த விக்கெட்..? புரசை V.S. பாபு தவெகவில் ஐக்கியம்... அதிமுகவில் மா. செ. பதவி பறிப்பால் அதிருப்தி என தகவல்..!
சில நிறுவனங்கள் தங்கள் புதிய மாடல்களின் விலையை நேரடியாக உயர்த்த ஆரம்பித்துள்ளன. இதனால் பொதுமக்கள் புதிய போன், டிவி வாங்குவதை தள்ளி வைக்கும் நிலை உருவாகியுள்ளது.
தொழில்துறை நிபுணர்கள் கூறுகையில், “சிப் பற்றாக்குறை தீர்வடையும் வரை விலை உயர்வு தொடரும். 2026 முதல் காலாண்டில் சில நிவாரணம் கிடைக்கலாம் என்றாலும், அடுத்த 2-3 மாதங்களில் வாங்குபவர்களுக்கு செலவு கணிசமாக அதிகரிக்கும்” என்று எச்சரிக்கின்றனர்.
இப்போது போன், டிவி, லேப்டாப் வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் விரைவில் முடிவெடுப்பது நல்லது – இல்லையெனில் அடுத்த சில மாதங்களில் பல ஆயிரங்கள் கூடுதல் செலவாகும்!
இதையும் படிங்க: உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு விசா கிடைக்குமா? ட்ரம்பின் அறிவிப்பால் கலங்கிய ரசிகர்கள்! புது விளக்கம்!