உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு விசா கிடைக்குமா? ட்ரம்பின் அறிவிப்பால் கலங்கிய ரசிகர்கள்! புது விளக்கம்!
குடியேற்ற விசாவுக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக, உலகக்கோப்பை கால்பந்து ரசிகர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், புதிய விளக்கத்தை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் வெளியிட்ட பெரும் அறிவிப்பு உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாகிஸ்தான், வங்கதேசம், ஈரான், ரஷ்யா உள்ளிட்ட 75 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு குடியேற்ற விசா (Immigrant Visa) வழங்குவதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை ஜனவரி 21-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இந்த அறிவிப்பால் பெரும் சந்தேகம் எழுந்தது – இந்த ஆண்டு அமெரிக்கா & மெக்சிகோவில் நடைபெறவுள்ள பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் 15 நாடுகள் இத்தடை பட்டியலில் உள்ளன. பிரேசில், மொராக்கோ, ஹைட்டி, அல்ஜீரியா, கேப் வெர்டே, கொலம்பியா, ஐவரி கோஸ்ட், எகிப்து, கானா, ஈரான், ஜோர்டான், செனகல், துனிசியா, உருகுவே, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் வீரர்கள், ரசிகர்கள், ஊடகவியலாளர்கள் அமெரிக்காவில் நடக்கும் போட்டிகளை காண முடியுமா? என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று தெளிவான விளக்கம் அளித்துள்ளது. வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “இந்த தடை குடியேற்ற விசாக்களுக்கு (Immigrant Visas) மட்டுமே பொருந்தும். இது நிரந்தரமாக அமெரிக்காவில் வசிக்கவும், பணியாற்றவும் விரும்புபவர்களுக்கு மட்டுமே தடை.
இதையும் படிங்க: பதக்கத்தை தரலாம்!! பரிசை தரமுடியாது!! ட்ரம்புக்கு நோபல் பரிசை கொடுத்த மச்சோடாவுக்கு கமிட்டி பதிலடி!
சுற்றுலா விசா (Tourist Visa / B1/B2), விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள், குடும்பத்தினர், ஊடகவியலாளர்கள் பயன்படுத்தும் குடியேற்றமல்லாத விசாக்களுக்கு (Non-Immigrant Visas) இந்த தடை எந்த விதத்திலும் பொருந்தாது.”
எனவே உலகக்கோப்பை கால்பந்து ரசிகர்கள், வீரர்கள், அணி உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் எவருக்கும் எந்த பிரச்னையும் இல்லை என்று அமெரிக்கா உறுதியளித்துள்ளது. இரட்டை குடியுரிமை கொண்டவர்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த விளக்கத்தால் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மிகுந்த நிம்மதியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: இனி மகளிர் தொகை ரூ.2000..! 5 முக்கிய தேர்தல் வாக்குறுதி கொடுத்த EPS..!