5 நாட்டு தலைவர்களுக்கும் பரிசை அள்ளி வழங்கிய பிரதமர் மோடி! இத்தாலி பிரதமர் மெலோனிக்கு ஸ்பெஷல் கிப்ட்!
ஐந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி அந்நாட்டுப் அரசப் பிரதிநிதிகளுக்கு இந்தியாவின் தனித்துவமான கைவினைப் பொருட்களை பரிசாக வழங்கினார்.
பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) கடந்த 15ம் தேதி தொடங்கிய ஐந்து நாள் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின் போது, பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு இந்தியாவின் பாரம்பரிய கைவினைப் பொருட்களை பரிசாக வழங்கியது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, சுவீடன், நார்வே மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு சென்ற மோடி, இந்திய கலாசாரம் மற்றும் கைவினை மரபுகளை உலக அரங்கில் மீண்டும் முன்னிறுத்தியுள்ளார்.
நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரேவை (Jonas Gahr Støre) சந்தித்த போது, சிக்கிமின் இயற்கை வளங்களை பிரதிபலிக்கும் உலர்ந்த ஆர்க்கிட் மலர் ஓவியம் மற்றும் ஆர்க்கிட் காகித எடைக்கற்களை மோடி பரிசளித்தார்.
கிழக்கு இமயமலையின் பல்லுயிர் வளத்தை எடுத்துக்காட்டும் இந்த பரிசுகள் கவனத்தை பெற்றன. அதேபோல் நார்வே ராணி சோன் ஜாவுக்கு (Queen Sonja) ஒடிசாவின் பாரம்பரிய பனை ஓலை பட்டாசித்திரம் வழங்கப்பட்டது. பட்டத்து இளவரசர் ஹாக்கனுக்கு (Haakon), Crown Prince of Norwayக்கு ஆந்திராவின் பாரம்பரிய கலம்காரி ஓவியம் பரிசாக அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க: டெல்லியில் அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் WFH! முதல்வர் ரேகா குப்தா அதிரடி உத்தரவு!
நெதர்லாந்து மன்னர் வில்லெம் அலெக்ஸாண்டர் (Willem-Alexander)க்கு ராஜஸ்தானின் புகழ்பெற்ற நீல மட்பாண்ட கலைப்பொருளை மோடி வழங்கினார். ராணி மாக்சிமாவுக்கு (Queen Máxima) மீனாகரி மற்றும் குந்தன் காதணிகள் வழங்கப்பட்டன. நெதர்லாந்து பிரதமர் Rob Jettenக்கு மதுபானி ஓவியம் பரிசளிக்கப்பட்டது.
சுற்றுப்பயணத்தின் இறுதியில் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி (Giorgia Meloni)யை சந்தித்த மோடி, அஸ்ஸாமின் மூகா பட்டு சால்வை மற்றும் மணிப்பூரின் அரிய ஷிருய் லில்லி பட்டு சால்வையை வழங்கினார். இந்தியாவின் பல மாநிலங்களின் கலை, கலாசாரம் மற்றும் கைவினை மரபுகளை உலக தலைவர்களிடம் கொண்டு சென்ற இந்த பரிசுகள், இந்தியாவின் மென்மையான தூதரக அணுகுமுறையாக பார்க்கப்படுகின்றன.
இதையும் படிங்க: இத மட்டும் செஞ்சுட்டீங்கன்னா!! பிரதமர் மோடியை நேர்ல பாக்கலாம்!! அதிரடி ஆஃபரை அறிவித்தது பாஜக!