×
 

'அரசுக்கு எதிராக மீண்டும் ஜிஹாத்'?  நாடாளுமன்றத்தில் சமாஜ்வாதி எம்.பி.-யின் சர்ச்சை பேச்சு!

நாடாளுமன்றத்தில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தின் போது, சமாஜ்வாதி கட்சி எம்பி ஒருவர் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

நாடாளுமன்றத்தில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தின்போது, உத்தரப் பிரதேசத்தின் ராம்பூர் தொகுதியைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மொஹிபுல்லா நத்வி பேசிய கருத்துக்கள் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அரசாங்கத்தின் அடக்குமுறையை எதிர்த்து முஸ்லிம்கள் மீண்டும் 'ஜிஹாத்' செய்ய வேண்டிய நிலை ஏற்படலாம் என்று அவர் கூறியது, பா.ஜ.க.வினர் மத்தியில்  பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா குறித்த விவாதத்தில் மொஹிபுல்லா நத்வி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், மத்திய பா.ஜ.க. அரசு சிறுபான்மையினரின் உரிமைகளைப் பறிப்பதாகக் குற்றம் சாட்டினார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 25 மற்றும் 26-வது பிரிவுகள் இந்த அரசால் நசுக்கப்படுகின்றன. நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிய முஸ்லிம்களின் வாரிசுகள், இந்த அரசின் அநீதி மற்றும் அடக்குமுறைக்கு எதிராகப் போராட மீண்டும் ஒருமுறை 'ஜிஹாத்' செய்ய வேண்டும் என்று யோசிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்" என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்.. SIR, தேசிய பாதுகாப்பு குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் உறுதி!

"முஸ்லிம்கள் இன்னும் எவ்வளவு காலம் இந்த ஒடுக்குமுறையைப் பொறுத்துக் கொள்வார்கள்?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.  மொஹிபுல்லா நத்வியின் இந்த "ஜிஹாத்" குறித்த பேச்சுக்கு பா.ஜ.க. தரப்பில் மிகக் கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளன.

 இது மிகவும் மோசமான கிரிமினல் குற்றம் என்று விமர்சித்துள்ளார். எம்.பி.-யின் இந்தப் பேச்சு சமூகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்தி, வன்முறையைத் தூண்டும் வகையில் உள்ளது, இது கலவரங்களுக்கு அழைப்பு விடுப்பது போல் இருக்கிறது. அவர் மீது கடுமையான கிரிமினல் சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பேசப்படும் வார்த்தைகளுக்கு ஒரு கண்ணியம் உள்ளது. ஆனால் எம்.பி. நத்வியின் கருத்து மிக மோசமான உணர்வற்ற தன்மையைக் காட்டுகிறது" என்று விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய மொஹிபுல்லா நத்வி, "நாட்டில் முஸ்லிம்கள் கேலி செய்யப்படுவது அரசமைப்புக்கும் தேசபக்திக்கும் எதிரானது" என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "சாகும் வரை அதிமுகவில் தான் இருப்பேன்": வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த முன்னாள் அமைச்சர்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share