டிஜிட்டல் அரெஸ்ட்... 50 லட்சம் பேரின் தகவல்கள் திருட்டு... தெலுங்கு திரையுலகை திடுக்கிட வைத்த நாகார்ஜுனா ...!
வீட்டில் இலவசமாக படம் பார்கிறோம் என நினைக்க வேண்டாம் உங்கள் டேட்டா திருடப்படுகிறது எனது குடும்பத்தினரையும் டிஜிட்டல் அரஸ்ட் செய்தனர் நடிகர் நாகார்ஜுனா பரபரப்பு பேட்டி
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்கள் தியேட்டரில் அல்லது ஓ.டி.டி.யில் வெளியான அன்றே ஐ.போம்மா ( பப்பம் டிவி ) ஆகிய இணைத்தில் இலவசமாக வெகியிடப்பட்டு வந்தது. இதில் படத்தை காண உலகம் முழுவதும் 5 கோடிக்கு மேல் பயனர்கள் உள்ளனர். இதனால் திரைப்பட துறைக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வந்தது.
இதுகுறித்து தெலங்கானா திரைப்பட தயாரிப்பாளர்கள் அளித்த புகாரை வைத்து ஐதராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்தநிலையில் இந்த வழக்கில் முக்கிய கரீபியன் தீவில் இருந்தபடி ஐ.போம்மா இணையத்தை இயக்கி ரூ.3000 கோடி வரை தெலுங்கு திரைப்படத்துறை இழப்பு ஏற்படுத்தி வந்த இம்மடி ரவி ஐதராபாத் வருவதை அறிந்த, ஐதராபாத் சைபர் கிரைம் போலீசார் இரண்டு நாட்களுக்கு அவரை கைது செய்து அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ 3 கோடியை முடக்கினர்.
ரவி திரைப்படங்களை இலவசமாக பார்வையாளர்களுக்கு அளித்தாலும் அதில் இடையே இடையே ஆன்லைன் கேமிங் சூதாட்ட செயலிக்கு விளம்பர செய்து பல கோடி பணம் பெற்றுள்ளது விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து அவரை சிறையில் அடைத்தனர். ரவியிடமிருந்து போலீசார் முக்கிய தகவல்களை சேகரித்து, வேறு சில திருட்டு வலைத்தளங்களை முடக்கினர்.
இதையும் படிங்க: இனி இவர்களுக்கு ரூ.2000 அபராதம்... நெல்லை மாநகராட்சி அதிரடி உத்தரவு...!
இந்நிலையில் டோலிவுட் திரைப்பட பிரபலங்கள் சிரஞ்சீவி மற்றும் நாகார்ஜுனா, இயக்குனர் ராஜமௌலி, தயாரிப்பாளர்கள் தில் ராஜு மற்றும் சுரேஷ் பாபு ஆகியோர் ஐதராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் அக்கினேனி நாகார்ஜுனா பேசுகையில், 'அனைத்து தெலுங்கானா காவல்துறையினருக்கும் சிறப்பு நன்றி. ஐபோம்மா ரவி கைது செய்யப்பட்டவுடன், சென்னையில் இருந்து ஒருவர் போன் செய்தார். இங்கு எங்களால் செய்ய முடியாததை உங்கள் தெலுங்கானா காவல்துறை செய்தது என்று பெருமையுடன் கூறினார். ஐபோம்மா ரவி 50 லட்சம் பேரின் தனிப்பட்ட டேட்டாக்களை திருடி உள்ளார். அவற்றை விற்று பணம் சம்பாதிக்கிறார். 6 மாதங்களுக்கு முன்பு, எங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் 2 நாட்களுக்கு டிஜிட்டல் கைது செய்யப்பட்டார். அந்த நேரத்தில், நாங்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தோம். அவர்கள் எங்களை காப்பாற்றினர். இருப்பினும் அவர்களை பிடிக்க முடியவில்லை. எங்கு இருக்கிறார்கள் என கூட கண்டுபிடிக்க முடியவில்லை.
நாம் பணம் இல்லாமல்தான் வீட்டில் உட்கார்ந்து இலவசமாக திரைப்படங்களைப் பார்க்கிறோம் என்று நினைக்காதீர்கள். உங்கள் டேட்டா திருடப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களுக்குத் தெரியாமல் கிரெடிட் கார்ட் உள்ளிட்ட உங்கள் அனைத்து தனிப்பட்ட தரவுகளும் திருட்டு மோசடி செய்பவர்களால் சேகரிக்கப்படுகின்றன.
சினிமா படம் இலவசமாக காண்பிக்கப்படுவதாகஅது நம்மை கவர சைபர் மோசடியாளர்கள் வீசும் வலை. எனவே இந்த ஒரு ஆன்லைனில் இணையத்தில் இலவசம் என்றால் அது நமக்கான டிராப் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்தத் திருட்டு அரக்கனிடமிருந்து சினிமா தொழில்துறையைக் காப்பாற்றிய தெலுங்கானா காவல்துறை மற்றும் காவல் ஆணையர் சஜ்ஜனருக்கு நன்றி ”எனக்கூறினார்.
இதையும் படிங்க: அட்ரா சக்க... தமிழகத்தில் விளையாட்டு நகரம்... அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!