×
 

தட்டி விடு... கடைசி நிமிஷத்துல கூட எல்லாம் மாறும்! நைனார் நம்பிக்கை

பாஜக கூட்டணியில் கடைசி நிமிஷத்தில் கூட மாற்றங்கள் வரும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

தமிழ்நாட்டு அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி இன்னும் சூடு பெறுகிறது. 2023 செப்டம்பரில் உடைந்த அதிமுக-பாஜக கூட்டணி, 2025 ஏப்ரல் மீண்டும் இணைந்தது. இந்த மறுமலர்ச்சி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இ.பி.எஸ்.) இடையான கூட்டுநிலைப்பிரச்சாரத்தால் உறுதிப்படுத்தப்பட்டது. இந்தக் கூட்டணி, டி.எம்.கே.வின் ஆட்சியை வீழ்த்துவதே முதன்மை இலக்கு என அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்தப் புதிய அணிப்பின்னணியில், அதிமுகவின் விலகிய தலைவர்களான முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோர் கூட்டணியில் இருந்து விலகியது, அரசியல் களத்தில் புதிய சீர்குலைவை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்திற்கு பிரதமர் மோடி வந்திருந்த போது அவரை சந்திக்க ஓ பன்னீர் செல்வத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படாதது இந்த பிளவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய ஓ பன்னீர் செல்வம் என்டிஏ கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அவரைத் தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் என் டி ஏ கூட்டணியிலிருந்து விலகுவதாக டிடிவி தினகரன் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்னுரிமை கொடுத்ததை கூட்டணியில் இருந்து விலகுவதற்கு காரணம் என்றும் நயினார் நாகேந்திரன் கூட்டணி கட்சிகளை முறையாக வழிநடத்த வில்லை என்றும் ஓபிஎஸ் கூட்டணியிலிருந்து விலகியதற்கு நயினார் நாகேந்திரன் தான் காரணம் என்றும் சரமாரி குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார். ஓ பன்னீர்செல்வத்திடம் தான் தொலைபேசியில் பேசியதாகவும் டிடிவி தினகரன் இடம் கூட பேசுவதற்கு தயார் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்திருந்தார். 

இதையும் படிங்க: 2026 தேர்தலே இலக்கு! அதிமுகவுடன் இணைந்து அனல் பிரச்சாரம்... அண்ணாமலை அறிவிப்பு

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக கூட்டணியில் கடைசி நிமிஷத்தில் கூட மாற்றம் வரும் என்று கூறினார். கூட்டணி கட்சி தலைவர்கள் அமித்ஷாவை சந்திப்பதில் எந்த தவறும் இல்லை என்றும் தெரிவித்தார். பிரச்சனைகளுக்கு பின்னர் நல்ல முடிவு வரும் என்றும் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்கள் உள்ளதால் மாற்றங்கள் வரும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். 

இதையும் படிங்க: துணை ஜனாதிபதி சி.பி ராதாகிருஷ்ணனுடன் சந்திப்பு! வாழ்த்து மழை பொழிந்த இபிஎஸ்...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share