×
 

"Wait and see" - அதிமுக+பாஜக கூட்டணியில் இணையப் போகும் முக்கிய கட்சி... ஹின்ட் கொடுத்த நயினார் நாகேந்திரன்...!

தமிழக பாஜகவுடன் கூட்டணிக்கு பெரிய கட்சிகள் வர வாய்ப்பு இருக்கிறது. இப்போதும் நாங்கள் வலுவாக தான் இருக்கிறோம்

தமிழகத்தில் நடக்க இருக்கும் 2026 தேர்தலில் நான் முதலமைச்சர் வேட்பாளர் இல்லை, எடப்பாடி பழனிச்சாமி தான் முதலமைச்சர் வேட்பாளர் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

நெல்லை மதுரை ரோடு வண்ணாரப்பேட்டை அருகே உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பீகார் மாநிலத்தின் தேர்தல் வெற்றி செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது.190க்கு மேல் வைத்து வாய்ப்புகள் கிடைக்கும். முதல்வர் ஸ்டாலினும் பீகார் பிரச்சாரத்திற்கு சென்றிருந்தார். காங்கிரஸ் கூட்டணி தான் வெற்றி பெறும் என்று கூறினார்.

உண்மையிலேயே மக்கள் பிரதமர் மோடியின் மத்திய அரசின் ஆட்சிக்கும் நிதீஷ் குமார் செய்த ஆட்சிக்கும் மீண்டும் அங்கீகாரம் தருகின்ற வகையில் வெற்றி செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது.

இதையும் படிங்க: செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாத ஜந்துக்கள்! விளாசிய நயினார் நாகேந்திரன்..!

மாலைக்குள் எல்லாம் முடிவுகளும் வந்துவிடும். பீகாரில் நல்லதொரு ஆட்சி நடைபெறும். பிரதமர் மோடியின் தலைமையில் நல்லாட்சியும் அமையும். இஸ்லாமியர்களுடன் நான் மாமா மச்சான் என்று தான் பழகி வருகிறேன். ஆனால் சிஏஏ போன்ற சட்டங்கள் மூலமாக இஸ்லாமியர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று கூறினார்கள்.

தமிழக பாஜகவுடன் கூட்டணிக்கு பெரிய கட்சிகள் வர வாய்ப்பு இருக்கிறது. இப்போதும் நாங்கள் வலுவாக தான் இருக்கிறோம். அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை எதிரிகளும் இல்லை.

முன்னாள் அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பாஜக என்னுடன் பேச்சுவார்த்தை நடத்தியது என செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார் என்ற கேள்விக்கு, பாஜக மாநில  தலைவர் நயினார் நாகேந்திரன் மழுப்பலாக பதில் அளித்தார்.

மக்கள் மனது வைத்தால் தான் பீகாரில் வெற்றி கிடைக்கும்.பாஜகவில் யார் நினைத்தாலும் முதலமைச்சர் ஆகலாம்.அமைச்சர் சேகர் பாபு எனது நண்பர்தான் நேற்று கூட அவருக்கு தொலைபேசியில் அழைத்தேன் கிடைக்கவில்லை.

2026 சட்டமன்றத் தேர்தலில் நான் முதலமைச்சர் வேட்பாளர் இல்லை இபிஎஸ் தான் முதலமைச்சர் வேட்பாளர். தமிழக முதலமைச்சருடன் எனக்கு தனிப்பட்ட முறையில் இருக்கும் நட்பு ஆழமானது. பீகாரில் 30 லட்சம் வாக்காளர்கள் இறந்து போனவர்கள். இல்லாதவர்களை எப்படி அந்த இடத்தில் வாக்காளர்களாக போட முடியும்.

இந்தியாவில் தேசப்பற்று அதிகமானவர்கள் குறைந்து போய் உள்ளது. பீகாரில் நடைபெறும் சம்பவத்திற்கும் டெல்லியில் நடைபெறும் சம்பவத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. மத்திய உள்துறை டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தை கட்டுப்படுத்தி இருக்கலாம். ஆனால் அதையும் மீறி சில சம்பவங்கள் நடைபெற்று தான் வருகிறது.

திமுகவினர் தான் எஸ்.ஐ.ஆர். படிவங்களை வழங்கி வருகிறார்கள் என தேர்தல் ஆணையத்திற்கு புகார் அனுப்ப இருக்கிறேன். கேரளாவில் பாஜக கட்சி வளர்ந்து வருகிறது.கஞ்சா போதை பொருட்களை தமிழகத்தில் கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது.

வைகோ நடை பயணம் மேற்கொள்ளவே தேவையில்லை. நேரடியாக முதல்வரிடம் கூறினாலே போதும்.வயதான காலத்தில் ஏன் பாவம் நடைபயணம் மேற்கொள்ள வேண்டும்.எனக்கு எந்த வெடிகுண்டு மிரட்டல்களும் வரவில்லை என்று கூறினார்.

இதையும் படிங்க: "நீரா" வாக்குறுதியும் கானல் நீரா? என்ன முதல்வரே... வெளுத்து வாங்கிய நயினார்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share