இணைந்த அடுத்த நாளே பதவி: தவெகவின் பரப்புரைச் செயலாளராக நாஞ்சில் சம்பத்தை நியமித்து விஜய் உத்தரவு..!!
தவெகவில் நேற்று இணைந்த நாஞ்சில் சம்பத்திற்கு தமிழக வெற்றிக் கழக பரப்புரை செயலாளராக பதவி வழங்கி அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசியல் களத்தில் தனது வசீகரப் பேச்சால் அறியப்பட்ட மூத்த பேச்சாளர் நாஞ்சில் சம்பத், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த அடுத்த நாளே அவருக்கு முக்கியப் பொறுப்பை வழங்கி அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார். நாஞ்சில் சம்பத் இனிமேல் தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரைச் செயலாளராகப் பணியாற்றுவார் என்று கட்சித் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நேற்று (டிசம்பர் 5) தான் அரசியல் களத்தின் முக்கியப் புள்ளிவிவரங்கள் மற்றும் தாம் திமுகவில் எதிர்கொண்ட கசப்பான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு தவெக-வில் இணைந்தார் நாஞ்சில் சம்பத். தான் பிரச்சாரமே செய்து வாழ்ந்தவன் என்றும், அந்த வாய்ப்பை மட்டுமே தம்பி விஜய்யிடம் எதிர்பார்ப்பதாகவும் அவர் நேற்று உணர்ச்சிப்பூர்வமாகப் பதிவு செய்திருந்தார். அவரது அரசியல் அனுபவத்தையும், தீவிரப் பிரசாரம் செய்யும் திறமையையும் அங்கீகரிக்கும் வகையில், தவெக தலைவர் விஜய் இந்த பதவியை அவருக்கு வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
நாஞ்சில் சம்பத் போன்ற அனுபவம் வாய்ந்த பேச்சாளரை முக்கியப் பொறுப்பில் அமர்த்தியிருப்பது, தேர்தலை இலக்காகக் கொண்டு கட்சி முழு வீச்சில் தன்னை தயார்படுத்தி வருகிறது என்பதற்கான அடையாளமாகவே அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது. களப் பிரசாரங்களை வலுப்படுத்துவது மற்றும் கட்சியின் கொள்கைகளை மக்களிடையே எளிதாகக் கொண்டு சேர்ப்பதில் இந்த நியமனம் முக்கியப் பங்கு வகிக்கும் என்று செய்திப் பதிவின் மூலம் அறியப்படுகிறது.
இதையும் படிங்க: "திமுக மேடைகளில் நிராகரிப்பு... வயிற்றில் அடித்தார்கள்!" வசைச் சொற்களால் மனமுடைந்தேன்: நாஞ்சில் சம்பத் கண்ணீர்!
இதையும் படிங்க: புதியதாக பிறந்ததைப் போல் பூரிக்கிறேன்!” - தவெக-வில் இணைந்த நாஞ்சில் சம்பத் பேட்டி