வாகன ஓட்டிகளே உஷார்... நாடு முழுவதும் டோல்கேட்களில் அதிரடி மாற்றம்...ஏப்ரல் 1 முதல் இந்த முறை ரத்து...!
ஒட்டுமொத்தமாக, ரொக்கமில்லா சுங்க முறை மூலம் நாட்டின் சாலை அமைப்பை நவீனமயமாக்கும் நோக்கத்துடன் NHAI இந்த முக்கிய முடிவை எடுக்கிறது.
நாடு முழுவதும் உள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளிலும் ரொக்கப் பரிவர்த்தனைகளை முற்றிலுமாக நிறுத்துவது குறித்து சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் 100க்கும் மேற்பட்ட மாநில நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் உட்பட 750க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் ரொக்கமாக பணம் செலுத்தும் முறை ஏப்ரல் 1, 2026 முதல் நிறுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது அனைத்து சுங்கச்சாவடிகளும் டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ளது. இனி சுங்கச்சாவடிகளில் முதன்மையாக ஃபாஸ்டேக் மற்றும் யூபிஐ மூலம் கட்டணம் செலுத்த முடியும்.
இந்த நடவடிக்கை மின்னணு சுங்க வசூல் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாற்றம் நீண்ட வரிசைகளில் நிற்கும் வாகனங்கள் எண்ணிக்கை குறைக்கவும், போக்குவரத்தை இயக்கத்தை விரைவுபடுத்தவும், பண பரிமாற்றத்தை குறைக்கவும், முழுமையான டிஜிட்டல் முறையை உறுதி செய்யவும் உதவும் என்று அரசு தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் 98 சதவீத ஃபாஸ்டேக்கை பயன்படுத்துவதால் ரொக்கமாக கட்டணம் செலுத்தும் முறையை கைவிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: #BREAKING தொகுதி பங்கீடு... திமுகவில் திடீர் மனமாற்றம்...விடிந்ததுமே அறிவாலயம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...!
தற்போதைய விதிகளின்படி, FASTagகள் இல்லாமல் சுங்கச்சாவடிகளுக்குள் நுழையும் வாகனங்கள் ரொக்கமாக பணம் செலுத்தினால் வழக்கமான கட்டணத்தை விட இரு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். UPI மூலம் பணம் செலுத்தினால், வாகன வகையை விட 1.25 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும். ரொக்கப் பயன்பாட்டைக் குறைக்க இந்த நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பிளாசா மட்டத்தில் நடத்தப்பட்ட மதிப்பாய்வுகளில், ரொக்கப் பரிவர்த்தனைகள் நெரிசல், காத்திருப்பு நேரம் அதிகரிப்பு மற்றும் பணம் செலுத்துவதில் சர்ச்சைகள் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
"டிஜிட்டலுக்கு முழுமையாக மாறுவது சாலை மற்றும் போக்குவரத்து நிர்வாகத்தை மேம்படுத்தும். வாகனங்களின் ஓட்டம் வேகமாக இருக்கும். நெரிசல் குறையும். பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும். நாடு முழுவதும் உள்ள 1,150க்கும் மேற்பட்ட தேசிய நெடுஞ்சாலை மற்றும் விரைவுச் சாலை சுங்கச்சாவடிகளில் இந்த மாற்றங்கள் செயல்படுத்தப்பட வாய்ப்புள்ளது. முழுமையான டிஜிட்டல் கட்டண முறை செயல்படுத்தப்பட்டால், போக்குவரத்து மேலாண்மை மிகவும் திறமையானதாக மாறும் மற்றும் தாமதங்கள் குறையும்" என்று அதிகாரிகள் நம்புகின்றனர். ஒட்டுமொத்தமாக, ரொக்கமில்லா சுங்க முறை மூலம் நாட்டின் சாலை அமைப்பை நவீனமயமாக்கும் நோக்கத்துடன் NHAI இந்த முக்கிய முடிவை எடுக்கிறது. ஏப்ரல் 1, 2026 முதல் செயல்படுத்துவது தொடர்பான இறுதி முடிவு விரைவில் அறிவிக்கப்படும் எனக்கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மதுரை குலுங்க...குலுங்க... நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர்...!!