என்ன STUDENTS ரெடியா..? நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு..!
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
நீட் என்பது National Eligibility cum Entrance Test என்று அழைக்கப்படும் இந்தியாவின் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வாகும். இது மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் இந்திய மருத்துவ அமைப்புகளின் MBBS, BDS, BAMS, BHMS, BUMS உள்ளிட்ட இளநிலை படிப்புகளுக்கு அனுமதி பெறுவதற்கான ஒரே தகுதித் தேர்வு ஆகும். தேசிய தேர்வு முகமை இந்தத் தேர்வை நடத்துகிறது.
இதற்கு முன்பு AIPMT என்று அழைக்கப்பட்ட இந்தத் தேர்வு, 2013 முதல் NEET எனப் பெயர் மாற்றம் பெற்று, 2019 முதல் NTA மூலம் முழுமையாக நடத்தப்படுகிறது. இந்தியா முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் MBBS உள்ளிட்ட படிப்புகளுக்கு அனுமதி பெற இந்தத் தேர்வு கட்டாயமாகும்.நீட் தேர்வு ஒரு ஒற்றை நாளில், ஒரே நேரத்தில் நாடு முழுவதும் நடைபெறும் OMR முறையிலான தேர்வு ஆகும்.
இது 13 மொழிகளில் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தமிழில் தேர்வு எழுதும் வசதியும் உள்ளது. இந்தத் தேர்வின் முக்கிய நோக்கம், மருத்துவக் கல்வியில் தரத்தை உறுதி செய்வதும், அனைத்து மாணவர்களுக்கும் சமமான வாய்ப்பை வழங்குவதும் ஆகும். முன்பு மாநில அளவில் தனித்தனியே நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வுகள் இப்போது NEET மூலம் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: NEET 2026: மாணவர்களே..!! மன அழுத்தமா..?? கவலை வேண்டாம்.. இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க..!!
இந்த நிலையில், 2026 ஆம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான NEET UG 2026-க்கான ஹால் டிக்கெட் வெளியீட்டு நிகழ்வு மருத்துவக் கனவுகளைக் கொண்ட லட்சக்கணக்கான மாணவர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய தேர்வு முகமை இந்த ஹால் டிக்கெட்டை இன்று அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in-ல் வெளியிட்டது. இந்த வெளியீடு தேர்வுக்கு சில நாட்களுக்கு முன்பாகவே நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் 2 லட்சம் மாணவர்கள் உட்பட நாடு முழுவதும் 28 லட்சம் பேர் நீட் தேர்வை எழுதுகின்றனர்.
இதையும் படிங்க: #BREAKING: CBSE 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு..! முன்கூட்டியே அறிவிப்பு..!!