விடிந்ததுமே பேரிடி... உலகையே உறைய வைத்த நேபாளம் பேரழிவு... காணாமல் போனவர்கள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்...!
நேபாள பெருவெள்ளம்: உயிரிழப்பு 389 ஆக உயர்வு; 977 பேரை தேடும் பணி தீவிரம்
நேபாளத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத பெருவெள்ளம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 389 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன 977 பேரை தேடும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
வெள்ளத்தின் கோரத்தாண்டவம் தொடர்பான காட்சிகள் வெளியாகி உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. பல கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கி உருக்குலைந்துள்ள நிலையில், கடந்த சில ஆண்டுகளில் நேபாளம் எதிர்கொண்ட மிகப்பெரிய பேரிடர்களில் ஒன்றாக இந்த பெருவெள்ளம் அமைந்துள்ளது.
வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட ரசுவா, சிட்வான் உள்ளிட்ட மாவட்டங்களில் நேபாள ராணுவம் மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 389 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டெல்லி சென்றடைந்தது தமிழக அமைச்சர்கள் குழு... இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு...!
மேலும், காணாமல் போன 977 பேரை கண்டறியும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இவர்களில் 517 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
மீட்பு நடவடிக்கைகளுக்காக நேபாள போலீசார், ராணுவத்தினர் மற்றும் ஆயுதப் போலீஸ் படையினர் என மொத்தம் 13,295 பாதுகாப்புப் படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். இதில் 7,250 நேபாள போலீசாரும், 4,200 ராணுவத்தினரும், 1,825 ஆயுதப் போலீசாரும் இடம்பெற்றுள்ளனர்.
தரைவழி மீட்புப் பணிகளுடன், ஹெலிகாப்டர்கள் மூலமாகவும் தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் இருந்து சுற்றுலா சென்ற 288 பேரில் இதுவரை 84 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 21 பேர் தமிழர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சீனா, அமெரிக்கா, மலேசியா, உக்ரைன், ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர், ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து நேபாளத்திற்கு சுற்றுலா சென்றவர்களில் பலரும் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழலில், தமிழர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் வகையில் தமிழக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், வினோத் மற்றும் தென்னரசு ஆகிய நான்கு பேரும் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
மத்திய அரசுடன் இணைந்து மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வரும் அமைச்சர்கள், நேற்றிரவு டெல்லி சென்றடைந்த நிலையில், தமிழ்நாடு இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகளையும் நேரில் பார்வையிட்டனர்.
இதையும் படிங்க: கண் முன் அரங்கேறிய கோரம்... ஹை அலர்ட்டில் உ.பி., பீகார்... அமித் ஷா பிறப்பித்த அதிரடி உத்தரவு...!