இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! மோடிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நெதன்யாகு! இந்திய பாரம்பரிய உடையில் இஸ்ரேல் பிரதமர்!
இந்தியாவின் பாரம்பரிய உடையை அணிந்து என்னுடைய நண்பர் பிரதமர் மோடியை ஆச்சரியப்படுத்தினேன் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்தார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனது நெருங்கிய நண்பரான இந்திய பிரதமர் நரேந்திர மோடியை ஆச்சரியப்படுத்தும் வகையில் இந்திய பாரம்பரிய உடையை அணிந்து வரவேற்றார். இது இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை இன்னும் ஆழமாக்கியுள்ளது.
பிரதமர் மோடி தற்போது இஸ்ரேலுக்கு இரண்டு நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இது அவரது இரண்டாவது இஸ்ரேல் பயணம் ஆகும். நேற்று காலை டெல்லியிலிருந்து தனி விமானத்தில் புறப்பட்ட மோடி, பென் குரின் சர்வதேச விமான நிலையத்தில் இறங்கியதும், நெதன்யாகு தனிப்பட்ட முறையில் சென்று வரவேற்றார். நெதன்யாகுவின் மனைவி சாராவும் உடன் இருந்தார். காவி நிறத்தில் உடை அணிந்திருந்த சாராவும் மோடியின் காவி பாக்கெட் ஸ்கொயருடன் ஒத்துப்போனது கவனத்தை ஈர்த்தது.
நேற்று மாலை இஸ்ரேல் நாடாளுமன்றமான க்னெசெட்டில் (Knesset) மோடி உரையாற்றினார். இது ஒரு வரலாற்று நிகழ்வு. இந்திய பிரதமராக முதல்முறையாக க்னெசெட்டில் உரையாற்றியவர் மோடி. மேலும், அந்நாட்டு நாடாளுமன்றத்தின் உயரிய விருதான 'நெசெட் சபாநாயகர்' பதக்கத்தை முதல்முறையாக இந்திய பிரதமராக பெற்றவர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்துள்ளது. நாடாளுமன்ற சபாநாயகர் அமினர் ஒகானா இந்த பதக்கத்தை வழங்கினார்.
இதையும் படிங்க: மோடி என்னோட பெஸ்ட் ஃப்ரண்ட்! அடிக்கடி போன்ல பேசுவோம்! ஐஸ் வைக்கும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!
हमारे संयुक्त रात्रिभोज से पहले, मैंने अपने मित्र प्रधानमंत्री मोदी को पारंपरिक भारतीय परिधान पहनकर चौंका दिया। 🇮🇱🇮🇳@narendramodi pic.twitter.com/3ElIQeLY97
— Benjamin Netanyahu - בנימין נתניהו (@netanyahu) February 25, 2026
இதன்பின்னர், நேற்றிரவு நெதன்யாகு தனிப்பட்ட இரவு விருந்து அளித்தார். அப்போது நெதன்யாகு, ஸ்டோன் கலரில் நேரு ஜாக்கெட் (மோடி ஜாக்கெட் என்று பிரபலமானது) மற்றும் குர்தா அணிந்து வந்து மோடியை வரவேற்றார்.
இதைப் பார்த்த மோடி ஆச்சரியமடைந்தார். இதுகுறித்து நெதன்யாகு தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் இந்தியில் பதிவிட்டுள்ளார்: "எங்களுடைய கூட்டு இரவு விருந்துக்கு முன்பு, இந்தியாவின் பாரம்பரிய உடையை அணிந்து என்னுடைய நண்பர் பிரதமர் மோடியை ஆச்சரியப்படுத்தினேன்."
மோடியும் இதற்கு பதிலளித்து, "Truly splendid! Your fondness for Indian attire reflects your respect for the rich culture and traditions of our country" என்று பாராட்டியுள்ளார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இரு தலைவர்களும் ஒருவருக்கொருவர் 'நண்பர்' என்று அழைத்து, கட்டிப்பிடித்து வரவேற்றது இந்தியா-இஸ்ரேல் உறவின் ஆழத்தை காட்டுகிறது.
இந்த பயணத்தில் மோடி இஸ்ரேல் ஜனாதிபதி ஈசாக் ஹெர்ஜோக் உள்ளிட்டோரை சந்தித்து பேசுகிறார். இந்திய வம்சாவளி இஸ்ரேலியர்களையும் சந்தித்து உரையாட உள்ளார். பாதுகாப்பு, தொழில்நுட்பம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இப்பயணத்தில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சம்பவம் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. கலாச்சார மரியாதை மூலம் அரசியல் உறவுகளை வலுப்படுத்தும் அழகிய எடுத்துக்காட்டாக இது விளங்குகிறது.
இதையும் படிங்க: 9 ஆண்டுகளுக்கு பின் மரண மாஸ் சம்பவம்!! நம்ம லிஸ்ட்லயே இல்லையே!! நெதன்யாகு அழைப்பில் இஸ்ரேல் பறக்கும் மோடி!