×
 

ஜிஎஸ்டி குறைப்பால் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும்.. நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை..!!

ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் தற்போது 2வது பரிசு கிடைத்துள்ளது. இது நடுத்தர மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தரும் என்று பிரதமர் மோடி கூறினார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேலும் வேகப்படுத்தும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களிடம் உரையாற்றினார். நாளை முதல் (செப்டம்பர் 22) அமலுக்கு வரவுள்ள GST சீர்திருத்தங்களை மையமாகக் கொண்ட இந்த உரையில், மோடி 'ஒரு நாடு-ஒரு வரி' என்ற தேசிய கனவு நனவாகியுள்ளதாகவும், இது ஒவ்வொரு குடும்பத்திற்கும் மகிழ்ச்சி அளிக்கும் என்றும் தெரிவித்தார். வருமான வரி குறைப்பு மூலம் நடுத்தர மக்களுக்கு முதல் பரிசு கிடைத்தது. ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் தற்போது 2வது பரிசு கிடைத்துள்ளது. இது நடுத்தர மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தரும் என்று கூறினார்.

நாளை தொடங்கும் நவராத்திரி பண்டிகையையும், ஜிஎஸ்டி (Goods and Services Tax) வரி அமைப்பில் புரட்சிகரமான மாற்றங்களையும் மையமாகக் கொண்ட இந்த உரையில், மோடி 'அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள்' என்று புகழ்ந்து, மக்களை 'ஜிஎஸ்டி காப்பீட்டு உத்சவ்' (GST Savings Festival) கொண்டாடுமாறு அழைப்பு விடுத்தார்.

இதையும் படிங்க: நேபாள இடைக்கால பிரதமருக்கு ஃபோன் போட்ட பிரதமர் மோடி.. ஓ..!! இதுதான் விஷயமா..!!

உரையின் தொடக்கத்தில், நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர், "இந்த சீர்திருத்தங்கள் 'அடுத்த தலைமுறை மாற்றங்கள்' ஆகும். நவராத்திரி பண்டிகையின் பரிசுதான் இந்த GST சீர்திருத்தங்கள் என்று கூறினார். நாட்டின் தற்போதைய தேவைகளையும் எதிர்கால கனவுகளையும் கருத்தில் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன" என்றார்.

ஜிஎஸ்டி சீர் திருத்தம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும். சரக்கு போக்குவரத்தில் இருந்த தடைகளை நீக்கவே ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்டது. 2-ம் தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தம் அனைத்து தரப்பினருக்கும் நன்மை உண்டாக்கும். பல்வேறு பெயர்களில் ஆன மறைமுக வரிகளால் ஏற்பட்ட சிக்கல்கள் ஜிஎஸ்டியால் அகன்றன. உங்களுக்கு பிடித்தமான பொருள்களை குறைக்கப்பட்ட விலையில் நாளை காலை முதல் வாங்க முடியும் என்றார்.

GST கவுன்சில் – மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒத்துழைப்பால் 12 சதவீதமும், 28 சதவீதமும் என்ற நிகர வரி அமைப்புகளை அகற்றி, 5 சதவீதமும் 18 சதவீதமும் என இரு-மட்ட அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், அன்றாடப் பொருட்கள் மலிவாகும் என்று அவர் வலியுறுத்தினார். "இது வெறும் வரி குறைப்பு அல்ல; 'GST சேமிப்பு உத்சவ்' போன்றது. ஏழை, மற்றும் நடுத்தர வர்க்க மக்கள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் அனைவரும் இதனால் பயனடைவார்கள்," என்று மோடி தெரிவித்தார். 

வருமான வரி 12 லட்சம் ரூபாய் வரை விலக்கு அறிவிப்புடன் இணைந்து, இது 'இரட்டை பொன்பந்து' போன்றது என்று அவர் உவமைப்படுத்தினார். இதன் மூலமாக, நடுத்தர வர்க்கத்தின் சேமிப்பு அதிகரிக்கும், இளைஞர்களின் கனவுகள் எளிதாக நிறைவேறும், முழு பொருளாதாரமும் வேகமெடுக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

'மேக் இன் இந்தியா' திட்டத்தை முன்னிறுத்தி, உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தலாம் என்று பிரதமர் மோடி கூறினார். இந்த மாற்றங்கள், நாட்டின் GDP வளர்ச்சியை 8 சதவீதத்திற்கு மேல் கொண்டு செல்ல உதவும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். மக்கள் நலன் சார்ந்த இந்த சீர்திருத்தங்கள், இந்தியாவின் பொருளாதார பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன.

இதையும் படிங்க: ஹேப்பி பர்த்டே மோடி.. மனதார வாழ்த்திய இத்தாலி பிரதமர் மெலோனி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share