×
 

வெப்ப அலையில் இருந்து மக்களை காப்பாற்றுங்க!! மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தல்!

'நம் நாட்டில் வெப்ப அலையால் பாதிப்புக்கு உள்ளாகும் மக்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள், உரிய நிவாரணங்களை மேற்கொள்ள வேண்டும்' என, தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் அதிகரித்து வரும் கடும் வெப்ப அலை பாதிப்புகளை முன்னிட்டு, தேசிய மனித உரிமைகள் ஆணையம் (National Human Rights Commission of India) முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. வெப்ப அலைகளால் பாதிக்கப்படும் மக்களை பாதுகாக்க மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுத்து, தேவையான நிவாரணங்களை வழங்க வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும், டில்லி யூனியன் பிரதேசத்திற்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கோடை காலத்தில் வெப்ப அலைகள் தீவிரமாகி வரும் நிலையில், விளிம்புநிலை மக்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியோர், திறந்த வெளியில் வேலை செய்யும் தொழிலாளர்கள் மற்றும் வீடற்றோர் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். கடும் வெப்பம் காரணமாக முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு உடல்நலப் பிரச்னைகள் அதிகரித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வாழ்வாதார இழப்புகள், தீ விபத்துகள் போன்ற அபாயங்களும் வெப்ப அலை காரணமாக உயர்ந்து வருவது கவலைக்கிடமானதாக பார்க்கப்படுகிறது.

தேசிய குற்றவியல் ஆவண காப்பகத்தின் தகவலின்படி, 2019 முதல் 2023 வரை வெப்ப அலை தாக்கத்தால் நாடு முழுவதும் 3,712 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையை கருத்தில் கொண்டு, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (National Disaster Management Authority) வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை மாநிலங்கள் கடைப்பிடித்து, உடனடி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அடுத்த 4 நாட்களுக்கு கொளுத்த போகுது வெயில்!! 3 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும்! வானிலை மையம் அலர்ட்!

மேலும், வெப்ப அலை தாக்கத்தை குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகங்களிடமிருந்து முழுமையான அறிக்கைகளை மாநில அரசுகள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தமிழகத்தில் வெப்பநிலை கடுமையாக உயர்ந்து வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி சென்னை உள்ளிட்ட 13 நகரங்களில் வெப்பநிலை 38 டிகிரி செல்ஷியசை கடந்துள்ளது. இதில் திருச்சியில் அதிகபட்சமாக 40.5 டிகிரி செல்ஷியஸ் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கம், கோவை, ஈரோடு, மதுரை, சேலம் உள்ளிட்ட நகரங்களிலும் கடும் வெப்பம் நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த சூழலில், வெப்ப அலை பாதிப்பை குறைக்க அரசு மற்றும் பொதுமக்கள் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இதையும் படிங்க: என் வாழ்நாளில் இப்படி பார்த்தே இல்லை! வியந்து போன ராகுல்காந்தி! அந்தமான் தீவில் இருந்து வெளியிட்ட வீடியோ!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share