பிரதமர் தலைமையில் கூடியது நிதி ஆயோக் கூட்டம்.. பல்வேறு மாநில முதல்வர்கள் அதிருப்தி!!
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது.
நடப்பு ஆண்டுக்கான நிதி ஆயோக் கூட்டத்தில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள் பங்கேற்று உள்ளனர். மத்திய அரசு விடுத்த அழைப்பின் பேரில் நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், தலைமைச் செயலாளர் மற்றும் நிதித்துறை செயலாளர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாட்டிற்கான நிதி தேவைகள் குறித்து இந்த கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்துரைக்க உள்ளார்.
இன்று பிற்பகல் நிதி ஆயோக் கூட்டத்தின் இடைவெளியில் பிரதமரை முதலமைச்சர் ஸ்டாலின் சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே பிரதமர் தலைமையில் டெல்லியில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தை சில மாநில முதல்வர்கள் புறக்கணித்துள்ளனர். கேரள முதல்வர் பினராயி விஜயன், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆகியோர் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.
இதையும் படிங்க: என் ரத்த நாளங்களில் ஓடுவது கொதிக்கும் சிந்தூர்.. ஆவேசமாக பேசிய பிரதமர் மோடி..!
இதையும் படிங்க: விரைவில் நலம் பெறுங்கள் பைடன்..! அமெரிக்க முன்னாள் அதிபர் குறித்து பிரதமர் மோடி வருத்தம்..!