எல்லாத்துக்கும் அமைச்சர் ராஜினாமா பண்ண முடியாது! புதுச்சேரி பாஜக அமைச்சர் நமச்சிவாயம் அதிரடி!
ஒவ்வொரு விஷயத்துக்கும் அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று சொன்னால் யாரும் பதவியில் இருக்க முடியாது என புதுச்சேரி பாஜக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
நீட் வினாத்தாள் முறைகேடு விவகாரத்தில், மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரி வரும் நிலையில், ஒவ்வொரு பிரச்சனைக்கும் அமைச்சர்கள் பதவி விலகத் தேவையில்லை என்று புதுச்சேரி பா.ஜ.க அமைச்சரும் மூத்த தலைவருமான ஏ. நமச்சிவாயம் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரும் போராட்டம் மற்றும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கை குறித்து அவர் அளித்த பேட்டியில் எதிர்க்கட்சிகள் கல்வி அமைச்சரின் ராஜினாமாவை வலியுறுத்துவது குறித்து அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது நாட்டில் நடைபெறும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் பொறுப்பேற்று ஒவ்வொரு அமைச்சரும் பதவி விலக வேண்டும் என்று சொன்னால், யாராலும் அமைச்சர் பதவியில் நீடிக்கவே முடியாது. அனைத்து நிகழ்வுகளுக்கும் ஏதேனும் ஒரு காரணத்தைக் காட்டி, உள்நோக்கத்தோடு விமர்சித்தால் அமைச்சரவையே இயங்க முடியாது.
அரசு ஒரு நல்ல திட்டத்தைக் கொள்கை முடிவாக எடுத்துச் செயல்படுத்தும்போது, சில நேரங்களில் எதிர்பாராத சிக்கல்கள் ஏற்படுவது சகஜம்தான். அதை எப்படிச் சரிசெய்ய வேண்டும் என்று பார்த்து நடவடிக்கை எடுப்பதுதான் அரசியல் முதிர்ச்சி. அதை விடுத்து, இதற்காக ஒட்டுமொத்த அமைப்பையோ அல்லது சம்பந்தப்பட்ட அமைச்சரையோ மாற்ற வேண்டும் என்று கூறுவது முற்றிலும் தவறானது.
இதையும் படிங்க: போராட்டம் இன்னும் வீரியமடையும்! கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய CJP சவுரவ் தாஸ் கெடு!
டெல்லியில் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித் துறை முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ், விசிக மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகள் தொடர்ந்து தீவிரப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இக்கோரிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில் அமைச்சர் நமச்சிவாயம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: தர்மேந்திர பிரதான் பதவி விலகியே ஆகணும் - மல்லிகார்ஜுன கார்கே!!