×
 

2 நாட்களுக்கு முன்பு நிறுத்தியிருந்தால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கும்.. காஷ்மீர் முதல்வர் வருத்தம்..!

போர் நிறுத்த அறிவிப்பிற்கு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா வரவேற்பு தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியை பாகிஸ்தான் அத்துமீரி தாக்கியதில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. அப்பாவி இந்தியர்கள் கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவை மேலும் கோபப்படுத்தியது. இதற்கு பதிலடியாக தீவிரவாதிகளின் நிலைகளை மட்டுமே குறி வைத்து இந்திய ராணுவம் பாகிஸ்தானின் பல இடங்களில் தாக்குதல் நடத்தியது.

 

இந்த நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்று வந்த மோதல் போக்கு தணிந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான தாக்குதல் நிறுத்தப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பாக். தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி..! உமர் அப்துல்லா அறிவிப்பு..!

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, இந்த முடிவு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பு வந்திருந்தால் உயிரிழப்புகள் பொறுப்பு சேதங்கள் ஏற்பட்டிருக்காது என்று வருத்தம் தெரிவித்தார். மக்களை இயல்பு நிலைக்கு திரும்புவது ஜம்மு காஷ்மீர் அரசின் கடமை என்று கூறினார். மேலும் மத்திய அரசு மீண்டும் வான் வழியை திறந்து ஸ்ரீ நகரில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள உதவும் என நம்புவதாகவும் விரைவில் விமான நிலையங்கள் விரைவாக திறக்கப்படும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆரம்பித்து வைத்தது பாகிஸ்தான்... முடித்து வைத்தது இந்தியா- உமர் அப்துல்லா பெருமிதம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share