×
 

இந்தியாவில் ஒரே நாடு ஒரே வரி! நிர்மலா சீதாராமன் கொடுத்த புதிய அப்டேட்...

இந்தியாவில் ஒரே நாடு ஒரே வரி சாத்தியமா என்பது குறித்து நிர்மலா சீதாராமன் பேசினார்.

GST என்பது ஒரு மதிப்பு கூட்டு வரி. இது பொருட்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தி முதல் நுகர்வு வரையிலான ஒவ்வொரு கட்டத்திலும் விதிக்கப்படுகிறது. ஆனால், இறுதி நுகர்வோர் மட்டுமே இந்த வரியின் முழு சுமையை ஏற்கின்றனர். இதற்கு உதவுவதற்காக, உள்ளீட்டு வரி கிரெடிட் என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, ஒரு வணிகர் தனது உற்பத்தி அல்லது வணிகச் செயல்பாடுகளுக்காக செலுத்திய வரியை, அடுத்த கட்டத்தில் செலுத்த வேண்டிய வரியில் இருந்து கழித்துக்கொள்ள முடியும்.

இதனால், ஒரே பொருளுக்கு பலமுறை வரி விதிக்கப்படுவது (இரட்டை வரி விதிப்பு) தவிர்க்கப்படுகிறது. இந்த முறை, வரி சுமையைக் குறைத்து, வணிகச் செயல்பாடுகளை மேலும் திறமையாக்குகிறது. இதனிடையே இந்தியா முழுவதும் ஒரே நாடு, ஒரே வரி கொள்கை அமல்படுத்துவது சாத்தியமில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். 4 அடுக்குகளை கொண்ட ஜிஎஸ்டி வரிமுறையில் 12, 28 ஆகிய 2 அடுக்குகளை நீக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் இனி 5 மற்றும் 18 ஆகிய 2 அடுக்கு வரி நிலைகள் மட்டுமே இருக்கும் என கூறினார். 

இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு இடையே பொருளாதார வளர்ச்சியில் கடுமையான வேறுபாடுகள் இருப்பதால் நாடு முழுவதும் ஒரே நாடு, ஒரே வரி கொள்கை அமல்படுத்துவது சாத்தியமில்லை என்று தெரிவித்தார். ஆடம்பர பென்ஸ் கார் மற்றும் சாமானியர்கள் பயன்படுத்தும்b FLIP FLOP செருப்புக்கும் ஒரே வரி விதிப்பது நியாயமற்றது என்றும் கூறினார்.

இதையும் படிங்க: பிரதமரின் தீபாவளி பரிசு! GST சீர்திருத்தத்தை புகழ்ந்து தள்ளிய நயினார் நாகேந்திரன்

அதுமட்டுமல்லாது, அரசாங்கத்தின் வரி குறைப்புகளின் பலன்கள் முழுமையாக நுகர்வோருக்கு பலனளிப்பதை உறுதி செய்ய கடுமையாக கண்காணிக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்துள்ளார். 

இதையும் படிங்க: மரண மாஸ்! வரலாற்று சிறப்பு முடிவு... GST சீர்திருத்தத்தை வரவேற்ற இபிஎஸ்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share