×
 

ஆபரேஷன் சிந்தூரில் இந்திய பந்தாடிய பாக்., விமானங்கள்! பழுது நீக்கி தரும் அமெரிக்கா! சீனாவுக்கு முட்டுக்கட்டை!

ஆப்ரேஷன் சிந்துார்' நடவடிக்கையின் போது, நம் ராணுவம் நடத்திய தாக்குதலால் சேதமடைந்த 'எப் - 16' ரக பாக்., போர் விமானங்கள், ரேடார்களை அமெரிக்கா பழுதுநீக்கி தந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் உயிரிழந்ததற்கு பதிலடியாக, மே மாதத்தில் இந்திய ராணுவம் நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை, பாகிஸ்தானின் ராணுவ உள்கட்டமைப்புகளுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. 

இதில் அமெரிக்க தயாரிப்பான F-16 போர் விமானங்கள், AWACS விமானங்கள், ரேடார்கள் உள்ளிட்ட சொத்துகள் பாதிக்கப்பட்டன. இந்த சேதங்களை சீனாவால் சரிசெய்ய அனுமதிக்காமல், அமெரிக்கா தனது சிறப்பு நிபுணர்கள் குழுவை அனுப்பி பழுதுபடுத்தியதாக ரகசிய ஆவணங்கள் வெளியாகியுள்ளன.

இந்திய விமானப்படை தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் அமர் பிரீத் சிங், சமீபத்திய செய்தியுறவு சந்திப்பில் இந்த நடவடிக்கையை 'வரலாற்று மைல்கல்' என விவரித்தார். இதில் பாகிஸ்தான் F-16, JF-17 போர் விமானங்கள் உள்ளிட்ட 9-10 விமானங்கள் அழிக்கப்பட்டதாகவும், ரேடார்கள், கட்டுப்பாட்டு மையங்கள், ஓடுதளங்கள், ஹேங்கர்கள் ஆகியவை கடுமையாக சேதமடைந்ததாகவும் தெரிவித்தார். 

இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த யுடியூபர்! ஜோதி மல்ஹோத்ரா வரிசையில் அடுத்தடுத்து சிக்கும் உளவாளிகள்!

குறிப்பாக, ஜகோபாபாத், புலாரி, ராவல்பிண்டி நூர் கான், சர்கோதா, ரஹிம்யார் கான், முஷாப் விமானப்படை தளங்கள் குறிவைத்து தாக்கப்பட்டன. இதில் F-16 விமானங்கள் இரண்டு, C-130 ஹெர்குலீஸ் விமானம், ஷ்வீடிஷ் AWACS விமானம் சேதமடைந்தன.

இந்த சேதத்தால் திகைத்த பாகிஸ்தான், மே மாதம் ரகசிய அவசர நிதியில் 400-470 மில்லியன் டாலர் (சுமார் 3,900 கோடி ரூபாய்) ஒதுக்கியது. சீனா உதவ முன்வந்தபோது, F-16 தொழில்நுட்பம் திருடப்படுவதை அஞ்சிய அமெரிக்கா, அதற்கு மறுத்தது. 

பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்து உதவி கோரியதால், அமெரிக்கா தோஹா, அபுதாபி, மேரிலாந்த் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு நிபுணர்கள் குழுவை அனுப்பியது. அவர்கள் F-16, C-130 விமானங்கள், ரேடார்கள், AWACS ஆகியவற்றை சரிசெய்தனர்.

இருப்பினும், ரஹிம்யார் கான் விமானப்படை தளத்தின் ஓடுதளம் இன்னும் பழுதுபடுத்தப்படவில்லை. தெற்கு பஞ்சாபில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் காரணமாக ஏற்பட்ட தாமதமே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.  இதனிடையே, எதிர்கால இந்தியத் தாக்குதல்களை எதிர்கொள்ள, அமெரிக்கா மற்றும் சீனாவிடமிருந்து அதிநவீன ரேடார் அமைப்புகளை வாங்குவதற்கு பாகிஸ்தான் விமானப்படை திட்டமிட்டுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர், 2019 பலாகோட் தாக்குதல்களை விட விரிவானதாக இருந்தது. இது பாகிஸ்தானின் வான்வெளி தளங்களை பலவீனப்படுத்தி, அமெரிக்காவின் ரகசிய உதவியை வெளிப்படுத்தியுள்ளது. இந்தியாவின் துல்லியத் தாக்குதல்கள், எதிர்காலத்தில் பயங்கரவாதத்திற்கு உரிய பாடமாக அமைந்துள்ளன.

இதையும் படிங்க: அத்துமீறினா அவ்ளோ தான்!! சும்மா இருக்க மாட்டோம்! பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் வார்னிங்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share