×
 

நாம தயார் பண்ணா தரமா தானே இருக்கும்! ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு இந்தியா ஆயுதங்களுக்கு டிமாண்ட்!

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின், இந்திய ராணுவ தயாரிப்புகளுக்கான மார்க்கெட் பெருமளவு உயர்ந்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் பாதுகாப்பு கருவிகள் மீதான நம்பகத்தன்மை அதிகரித்துள்ளது.

காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 போர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமை இடமாக கொண்டு செயல்படும் லக்‌ஷர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் (The Resistance Front - TRF) என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. 

இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த 6-ந்தேதி நள்ளிரவில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியது. ஜெய்ஷ் இ முகமது தலைவன் மசூத் அசார் குடும்பத்தினர் உட்பட 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்த நம் ராணுவம், போருக்கு வந்த பாகிஸ்தான் ராணுவத்தையும் பந்தாடியது. பாகிஸ்தானின் ராணுவ தளங்கள், விமானப்படை தளங்களை பிரமோஸ் ஏவுகணைகளை வீசி நம் ராணுவம் தகர்த்தது. இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தான் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டது. தாக்குதலை சமாளிக்க முடியாத பாகிஸ்தான் இந்தியாவிடம் கெஞ்சியது. போரை நிறுத்திக்கொள்வோம் என்று மன்றாடியதால் இந்தியாவும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டது.

இதையும் படிங்க: ரபேல் விமானம் குறித்து பொய்களை பரபப்பும் சீனா! பொங்கி எழுந்த பிரான்ஸ்! விற்பனையை தடுக்க சதியா?

இந்த நிலையில் டிஆர்டிஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார். உலக அளவில் பாதுகாப்பு துறையக்கு செலவிடப்படும் தொகை பெருமளவு உயர்ந்துள்ளது. அனைத்து நாடுகளும் ராணுவத்தை பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. முன்பு எப்போதும் இல்லாத வகையில், 2024ம் ஆண்டில் உலக நாடுகளின் ராணுவத்திற்கான செலவு 2.4 ட்ரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின், இந்திய ராணுவ தயாரிப்புகளுக்கான மார்க்கெட் பெருமளவு உயர்ந்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் பாதுகாப்பு கருவிகள் மீதான நம்பகத்தன்மை அதிகரித்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நவடிக்கையின் போது, நம் வீரர்கள் அவர்களின் வீரத்தை மட்டுமல்ல நம் உள்நாட்டு உற்பத்தி திறமையையும் சேர்த்து வெளிப்படுத்தினர். இதன் மூலம் நம் நாட்டில் தயாரிக்கப்படும் பாதுகாப்பு துறை உபகரணங்களுக்கு சர்வதேச அளவில் மிகப் பெரிய வர்த்தக வாய்ப்பு காத்திருக்கிறது. 

இந்தியாவின் ராணுவ பட்ஜெட் உலகின் பல்வேறு நாடுகளின் மொத்த ஜிடிபியை விட பல மடங்கு அதிகம். இவ்வளவு பெரிய பட்ஜெட்டை நாம் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். மக்களின் கடின உழைப்பால் பெறப்படும் வரிப்பணத்திலிருந்து ராணுவத்திற்கான பட்ஜெட் ஒதுக்கப்படும் நிலையில், அந்த பணத்தை நாம் சரியான வகையில் பயன்படுத்த வேண்டிய கடமை நமக்கு உள்ளது. இன்றைய நாளில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்பு துறைக்கு ஒதுக்கும் நிதியை வெறும் செலவினமாக பார்ப்பதில்லை. அது பொருளாதார முதலீடாகவும் பார்க்கப்படுகிறது. 

பொருளாதாரத்தை பல மடங்கும் பெருக்கும் வழியாகவும் பார்க்கப்படுகிறது. ராணுவத்திற்கு தேவையான தளவாட உற்பத்தியில் நாம் மிகப் பெரிய சாதனை படைத்துள்ளோம். இந்த துறையில் உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளதுடன், வெளிநாடுகளுக்கான ஏற்றுமதியும் முன் எப்போதையும் விட அதிகரித்துள்ளது. ராணுவ தளவாட உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி உள்ளிட்டவற்றில் வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்படுகிறது. இது நமக்காக எல்லையில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கு புத்துணர்ச்சியும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும் என ராஜ்நாத் சிங் பேசினார்

இதையும் படிங்க: நெட்வொர்க் இல்லாத சிம் கார்டு.. ஓல்டு டெக்னாலஜி.. ஐநா பாதுகாப்பு கவுன்சில், WTO-வை வெளுத்து வாங்கிய மோடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share