பாகிஸ்தானுக்கு வக்காலத்து? இந்தியாவுக்கு எதிராக புழுகிய ஊடகங்கள்.. சீனா, துருக்கி எக்ஸ் கணக்குகள் முடக்கம்..!
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சண்டையின் போது, இந்தியாவிற்கு எதிராக பொய்யான தகவல்களை பரப்பிய சீனா, துருக்கி ஊடகங்களின் எக்ஸ் தள கணக்குகளை இந்தியா முடக்கி உள்ளது.
காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலக்கு பதிலடியாக இந்தியா ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை எடுத்தது. இரவோடு இரவாக போர் விமானங்களை அனுப்பி, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த பயங்கரவாதிகளின் 9 முகாம்களை குண்டு வீசி தகர்த்தது. பயங்கரவாதிகள் கற்பனை செய்ய முடியாத அளவு அடி விழுந்தது. 100 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். இந்த ஆப்ரேஷனில் ரபேல் போர் விமானங்கள் முக்கிய பங்காற்றின. இந்தியாவின் நடவடிக்கையை தாங்கிக்கொள்ள முடியாத பாகிஸ்தான், இந்தியாவின் ரபேல் உட்பட 5 போர் விமானங்களை சுட்டு விழ்த்தியதாக பாகிஸ்தான் அளந்து விட்டது.
பாகிஸ்தான் பார்லிமென்ட்டிலேயே இப்படியொரு பச்சை பொய்யை அந்த நாட்டின் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் கூறினார். ஆனால் இதற்கான எந்த ஆதாரத்தையும் பாகிஸ்தான் காட்டவில்லை. இந்த நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பாகிஸ்தானின் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் பேட்டி அளித்தார். டிவி ஆங்கருக்கு பதில் அளித்துக்கொண்டிருந்த பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப், இந்தியாவின் அடாவடி தனத்துக்கு தக்க பதிலடி கொடுத்தோம். ரபேல் உட்பட 5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தி விட்டோம் என்றார்.
இதையும் படிங்க: காஷ்மீர் விவகாரத்தை நாங்கள் பார்த்துக்கிறோம்.. அதிபர் ட்ரம்ப் வாய்க்கு பூட்டுபோட்ட இந்தியா..!
உடனே குறுக்கிட்ட ஆங்கர், கொஞ்சம் இருங்க. முதல்ல இந்த போர் விமானம் விவகாரத்தை முடிச்சிட்டு, அடுத்த கேள்விக்கு போலாம். இந்தியாவோட 5 போர் விமானங்கள சுட்டு வீழ்த்திட்டோம்னு பாகிஸ்தான் சொல்லுது. ஆனால் அப்படிலாம் ஒண்ணும் நடக்கல. இதுக்கு எந்த ஆதாரமும் இலலனு இந்தியா சொல்லுது. ரபேல் உட்பட 5 போர் விமானங்கள சுட்டது உண்மைனா, இப்போவே எவிடன்ச காட்டுங்க பார்க்கலாம் என்று ஆங்கர் கேட்டார்.
இதற்கு பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் சொன்னது தான் ஹைலைட். ஆதாரம் எல்லாமே சோசியல் மீடியால தான் இருக்குது. அதுவும் எங்க சோசியல் மீடியா இல்ல. இந்தியாவோட சோசியல் மீடியால.நாங்க தாக்கியதும் போர் விமானங்களோட பாகங்கள் நொறுங்கி விழுந்துச்சு. அது இந்தியாவோட சோசியல் மீடியால தான் பரவி வருதுனு சிறு பிள்ளைத்தனமாக சொன்னார் கவாஜா ஆசிப். ஒரு நாட்டின் ராணுவ அமைச்சராக இருப்பவர் இப்படி சோசியல் மீடியாவில் ஆதாரம் இருக்கிறது என்று சொன்னதை கேட்டு ஒரு கணம் அதிர்ந்து போனார் டிவி ஆங்கர்.
உடனே ராணுவ அமைச்சருக்கு அவர் பாடம் எடுத்தார். சாரி சார், சோசியல் மீடியா கன்டன்ட் பற்றி பேச உங்கள நாங்க இங்க அழைக்கல. நீங்க தான் பாகிஸ்தானோட ராணுவ அமைச்சர். அதனால தான் உங்க கிட்ட கேட்கிறேன். எவிடன்ஸ் எங்க சார். சோசியல் மீடியா கன்டன்ட் பத்திலாம் இங்க பேச கூடாது என்று சொன்னார். இந்த பொய் செய்தியை தான் சீனா, துருக்கி செய்தி ஊடகங்கள் அந்நாட்டு மக்களுக்கு பரப்பி உள்ளது.
ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலில் இந்தியாவின் விமானங்கள் தாக்கி அழிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் பல இடங்களில் இந்தியா நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, மற்றொரு இந்திய போர் விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியுள்ளது என்ற செய்தியை சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி ஊடகமான TRT Word-ன் வெளியிட்டன.
தவறான தகவல்களை வெளியிடுவதற்கு முன்பு உண்மைகளை சரிபார்த்து, ஆதாரங்களை மறுவிசாரணை செய்யுமாறு சீனாவை இந்தியா எச்சரித்திருந்த சில நாட்களுக்கு பின்பு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இப்போதும், எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அருணாச்சலப்பிரதேசம்.. சீனாவுக்கு இந்தியா கண்டிப்பு..!