ஆபரேஷன் சிந்தூர்! அடிவாங்குனது உண்மை தான்!! பொளந்து கட்டிய இந்தியா!! உண்மையை ஒப்புக்கொள்ளும் பாக்.,!
இந்தியாவின் 'ஆப்ரேஷன் சிந்துார்' நடவடிக்கையின் போது, 80 ட்ரோன்களை பாகிஸ்தான் எல்லைக்குள் அனுப்பி தாக்குதல் நடத்தியதில், நுார் கான் விமான படைத்தளம் சேதமடைந்ததை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தார் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.
இஸ்லாமாபாத்: இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' ராணுவ நடவடிக்கையின் போது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் பாகிஸ்தானின் முக்கிய விமானப்படைத் தளமான நூர் கான் சேதமடைந்ததை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். இது இந்தியாவின் தாக்குதலின் தீவிரத்தை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இத்தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியப் படைகள் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தின. இதில் பாகிஸ்தானின் பல விமானப்படைத் தளங்களும் குறிவைக்கப்பட்டன.
இந்தத் தாக்குதலில் 36 மணி நேர இடைவெளிக்குள் இந்தியா 80 ட்ரோன்களை பாகிஸ்தான் எல்லைக்குள் அனுப்பி தாக்குதல் நடத்தியதாக இஷாக் தார் தெரிவித்தார். அதில் 79 ட்ரோன்களை பாகிஸ்தான் படைகள் வழிமறித்ததாகவும், ஒன்று மட்டும் நூர் கான் விமானப்படைத் தளத்தைத் தாக்கியதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: ஆபரேஷன் சிந்தூர் 2.0! இறங்கி அடிக்கும் இந்தியா! குலைநடுங்கும் பாக்.,! மீண்டும் போர் பதற்றம்!
ராவல்பிண்டியில் அமைந்துள்ள நூர் கான் தளம் பாகிஸ்தானின் முக்கிய விமானப்படைத் தளங்களில் ஒன்று. ஆபரேஷன் சிந்தூரில் குறிவைக்கப்பட்ட 11 தளங்களில் இதுவும் அடங்கும் என்று கூறப்படுகிறது.
மேலும், தாக்குதலால் ராணுவத் தளத்துக்கு பெரும் சேதம் ஏற்பட்டதையும் வீரர்கள் காயமடைந்ததையும் இஷாக் தார் ஒப்புக்கொண்டார். இதுவரை பாகிஸ்தான் தரப்பு இந்தியத் தாக்குதலால் பெரும் சேதம் ஏற்பட்டதாகக் கூறி வந்த நிலையில், தற்போது வெளியுறவு அமைச்சரே இதை ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியும் இந்தத் தாக்குதல் குறித்து பேசியுள்ளார். “இந்தியாவின் ஏவுகணைகளும் ட்ரோன்களும் பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்தபோது இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டியில் பெரும் பீதி நிலவியது.
தாக்குதல் தீவிரமடைந்தபோது ராணுவ செயலர் என்னை பதுங்குகுழிக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார். இந்தியாவின் தாக்குதல் மிக ஆக்ரோஷமாக இருந்தது. எங்கள் பாதுகாப்பு வளையங்களை மீறி உள்ளே நுழைந்த விதம் எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது” என்று அவர் கூறினார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை இந்தியாவின் ராணுவத் திறனை உலகிற்கு எடுத்துக்காட்டியது என்று பாதுகாப்பு வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் தரப்பு இப்போது தாக்குதலின் சேதத்தை ஒப்புக்கொண்டது இந்தியாவின் வெற்றியை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: மன்னிப்பு கேட்க மாட்டேன்!! ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து சர்ச்சை பேச்சு! காங்கிரஸ் மூத்த தலைவர் அடம்!