அடுத்தடுத்து செக் வைக்கும் இந்தியா..! பாக். சார்ந்த ஓடிடி நிகழ்ச்சிகளுக்கு தடை..!
பாகிஸ்தான் தொடர்புடைய ஓடிடி கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
பகல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானின் எக்ஸ் தளம், இன்ஸ்டாகிராம் பக்கங்கள் ஆகியவை முடக்கப்பட்ட நிலையில், மற்றுமொரு அதிரடி உத்தரவை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் தேசிய பாதுகாப்பின் நலனுக்காக, இந்தியாவில் செயல்படும் அனைத்து OTT தளங்கள், மீடியா ஸ்ட்ரீமிங் தளங்கள் மற்றும் இடைத்தரகர்கள், சந்தா அடிப்படையிலான மாதிரியாகவோ அல்லது வேறுவிதமாகவோ பாகிஸ்தான் தொடர்புடைய கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உணவுக்காக கையேந்தும் நிலைமை..! பசி, பட்டினியால் தவிக்கும் காஸா மக்கள்..!
பாகிஸ்தான் தொடர்புடைய வலைத் தொடர்கள், திரைப்படங்கள், பாடல்கள், பாட்காஸ்ட்கள் மற்றும் பிற ஸ்ட்ரீமிங் மீடியா உள்ளடக்கத்தை உடனடியாக நிறுத்துமாறும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் என்ட்ரி.. சிக்கிய 4 சீனர்கள்..!