இந்தியாவின் 5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கப்சா.. அம்பலப்படுத்திய சர்வதேச ராணுவ நிபுணர்.!
இந்தியாவின் 5 போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறுவதை பிரிட்டனைச் சேர்ந்த சர்வதேச ராணுவ நிபுணர் மைக்கேல் கிளார்க் நிராகரித்துள்ளார்.
இந்தியாவின் 5 போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறுவதை பிரிட்டனைச் சேர்ந்த சர்வதேச ராணுவ நிபுணர் மைக்கேல் கிளார்க் நிராகரித்துள்ளார்.
பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக 'ஆபரேசன் சிந்தூர்' நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது. இன்று அதிகாலை பாகிஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆக்கிரமிப்பு பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. இந்தத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதாகவும் 46 பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் தெரிவித்தது. இதேபோல்
ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்ததாகவும் 43 பேர் காயமடைந்துள்ளதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் இந்தியாவின் ஐந்து போர் விமானங்களை தங்கள் நாட்டின் படைகள் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இதில் இரண்டு விமானங்கள் காஷ்மீரிலும் ஒன்று இந்தியாவின் பதிண்டாவிலும் வீழ்த்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்த கருத்தை அந்நாட்டு பிரதமரும் தெரிவித்துள்ளார்.
ஆனால், இதைச் செய்தியாக வெளியிட்ட சீன ஊடகத்துக்கு இந்திய ராணுவம் மறுப்பு தெரிவித்தது.
இந்நிலையில் இந்தியாவின் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகப் பாகிஸ்தான் கூறுவதை பிரிட்டிஷ் ராணுவ நிபுணர் மைக்கேல் கிளார்க் புறந்தள்ளியுள்ளார். இதுதொடர்பாக ஸ்கை டி.வி.யில் பேசிய அவர், "பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவின் 5 ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக கருதவில்லை. இத்தாக்குதலில் இந்தியா ரஃபேல் போர் விமானங்களை ஈடுபடுத்தின. அதன் வேகமும், ரேஞ்சும் மிக அதிகமானது. ரஃபேல் மிகவும் விலை உயர்ந்தது. மிகவும் சக்தி வாய்ந்தது. அதன் துல்லியமான வேகத்தைத் தாண்டி அவற்றைச் சுட்டு வீழ்த்தியதாகக் கூறுவது ஆச்சரியமளிக்கிறது. பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக நான் கருதவில்லை" என்று மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மசூத் அசார் தலைமையகம் முதல் பயிற்சி கூடம் வரை... வாஷ் அவுட் ஆக்கிய இந்திய ராணுவம்..!!
இதையும் படிங்க: தாக்குதலுக்கு அடங்காத பாக்., எல்லையில் அத்துமீறி தாக்குதல்.. பலியான அப்பாவி மக்கள்!!