×
 

ஈரான் - இஸ்ரேல் போர்! சவுதிக்கு கை கொடுக்கும் பாக்.,! வான் பாதுகாப்பு, படைகள் அரேபியாவுக்கு அனுப்பிவைப்பு!

சவுதி அரேபியாவின் எண்ணெய் கிணறுகளை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருவதால், பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் படைகளை அந்நாட்டுக்கு பாகிஸ்தான் அனுப்பியுள்ளது.

இஸ்லாமாபாத்: ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்களால் ஏற்பட்ட போர் பதற்றத்தில், சவுதி அரேபியாவின் எண்ணெய் கிணறுகள் மற்றும் அராம்கோ நிலையங்களை குறிவைத்து ஈரான் ட்ரோன், ஏவுகணை தாக்குதல்கள் நடத்தி வருகிறது. 

நேற்று முன்தினம் சவுதியின் மிகப்பெரிய எண்ணெய் வசதிகள் தாக்கப்பட்ட நிலையில், பாகிஸ்தான் தனது அண்டை நாட்டுடனான பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் உடனடியாக ராணுவ உதவியை அனுப்பியுள்ளது.

2025 செப்டம்பரில் கையெழுத்தான ஸ்ட்ராடஜிக் மியூச்சுவல் டிஃபென்ஸ் அக்ரீமென்ட் (SMDA) படி, ஒரு நாட்டுக்கு எதிரான தாக்குதலை மற்றொன்றுக்கு எதிரான தாக்குதலாக கருதி பதிலடி கொடுக்க வேண்டும். 

இதையும் படிங்க: ஈரான் புதிய ஆட்சியாளராக கமேனியின் மகன் தேர்வு! உச்ச தலைவராகிறார் மொஜ்தபா!!

இதன் அடிப்படையில் பாகிஸ்தான் சவுதி அரேபியாவுக்கு LY-80 (HQ-16 ஏற்றுமதி பதிப்பு), FM-90 போன்ற நடுத்தர தூர வான் பாதுகாப்பு அமைப்புகளையும், Anza தோளில் சுமக்கும் MANPADS ஏவுகணைகளையும் அனுப்பியுள்ளது. இவை குறைந்த உயரத்தில் பறக்கும் ட்ரோன்கள், ஹெலிகாப்டர்கள், குரூஸ் ஏவுகணைகளை 15-40 கி.மீ. தொலைவில் இருந்தே சுட்டு வீழ்த்தும் திறன் கொண்டவை.

ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானப்படை தளத்தில் இருந்து கராச்சி வழியாக இந்த அமைப்புகள் சவுதிக்கு கொண்டு செல்லப்பட்டன. பாகிஸ்தான் ராணுவ வீரர்களும், தளவாடங்களும் அனுப்பப்பட்டுள்ளன. இவை பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலேயே இருந்து சவுதியின் வான் பாதுகாப்பு வலையமைப்புடன் இணைக்கப்படும். ஈரான் எல்லையை பகிரும் பாகிஸ்தான் மீதும் தாக்குதல் நடத்த வாய்ப்பு உருவாகியுள்ளது.

பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில், “இந்திய தலைவர்கள் மற்றொரு போருக்கு தயாராகி வருகின்றனர். இந்தியா போர் அரங்கிலிருந்து விலகி அர்த்தமுள்ள பேச்சுக்கு வர வேண்டும். யார் மோதினாலும் அவர்களுக்கு அவமானகரமான தோல்வியை தர நாங்கள் தயாராக உள்ளோம். 

ஆனால் அதை பரிந்துரைக்க மாட்டேன்” என கூறினார். மேற்காசிய போர் பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ள நிலையில், பாகிஸ்தான்-சவுதி ஒப்பந்தம் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளது. இது இந்தியா உள்ளிட்ட நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த நடவடிக்கை மேற்காசியாவில் ஈரான்-சவுதி மோதலை மேலும் சிக்கலாக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பாகிஸ்தான் ஈரானுடன் உறவுகளை பேணி வரும் நிலையில், சவுதிக்கு ஆதரவு அளிப்பது இருதரப்பு சமநிலையை சவாலுக்கு உள்ளாக்கியுள்ளது.

இதையும் படிங்க: ஈரானின் தொடர் தாக்குதலால் பலத்த சேதம்!! மூடப்பட்டது சவுதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share