×
 

4 நாள்தான் தாக்குபிடிக்குமாம்..! போர் ஏற்பட்டால் பாக். நிலை பரிதாபம்தான்..! என்ன காரணம் தெரியுமா?

இந்தியாவுடன் பாகிஸ்தான் போர் செய்தால் அந்நாடு 4 நாட்களுக்கு மட்டுமே தாக்குப் பிடிக்கும் வகையில் ஆயுதங்கள் இருப்பு இருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக பாகிஸ்தானுக்கு ஆயுதக் கொள்முதல் குறைந்துவிட்டதால், இந்தியாவுடன் போர் ஏற்பட்டால் 4 நாட்கள் தாக்குப்பிடிக்கும் அளவுக்குத்தான் பாகிஸ்தானிடம் ஆயுதங்கள் கையிருப்பு உள்ளன.

பாகிஸ்தான் ஆயுதங்கள் தயாரிப்பு கூடத்தில் வெளிநாடுகளில் இருந்து அதிகமான ஆயுதங்கள் ஆர்டர் வருவதாலும், பழைய ஆயுதங்களை தயாரிப்பதாலும் அதிகமாகத் தயாரித்து இருப்பு வைக்க முடியவில்லை.இதனால் பாகிஸ்தான் ராணுவத்துக்கு போர் ஏற்பட்டால் நீண்டகாலத்துக்கு சமாளிக்கும் வகையில் ஆயுதங்கள் இருப்பு இல்லை.

இதையும் படிங்க: அரபிக்கடல் ஆப்ரேசன்.. கடற்படை தளபதிக்கு மோடி கொடுத்த உத்தரவு.. அச்சத்தில் உறையும் பாகிஸ்தான்..!

இந்தியாவின் தரைப்படை ராணுவத்துக்கு எதிராக, பாகிஸ்தான் தரைப்படையி்ன் ஆயுதங்களில் பீரங்கி மற்றும் கவச டாங்கிகளையே அதிகம் நம்பியுள்ளது. எம்109 ஹவுட்சர்ஸுக்கு தேவைாயன 155 எம்எம் வெடிகுண்டுகள், அல்லது 120எம்எம் ராக்கெட்டுகள் போதுமான அளவில் இல்லை. உக்ரைனுக்கு 155மிமீ ஆயுதங்களை விற்பனை செய்ததால் உள்நாட்டு கையிருப்பை நிரப்ப பாகிஸ்தான் ஆயுதத் தயாரிப்பு கூடம் சிரமப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் பாதுகாப்பைப் பலிகொடுத்து சர்வதேச ஆயுதத் தேவையை நிறைவு செய்யும் நிலையில் பாகிஸ்தான் இருக்கிறது. குறிப்பாக பாகிஸ்தானில் பொருளாதார பிரச்சினைகள் கடுமையாக உள்ளன, பணவீக்கம், அதிகரிக்கும் கடன், குறைந்து வரும் அந்நியச்செலாவணி கையிருப்பு ஆகியவை ராணுவத்தின் செயல்பாட்டுத் திறனை மேலும் குறைக்கிறது.

இதன்காரணமாக ராணுவத்துக்கு வழங்கப்பட்டுவரும் ரேஷன் பொருட்கள், ராணுவப் பயிற்சிகளை குறைக்க வேண்டியுள்ளது, எரிபொருட்கள் பற்றாக்குறையால் போர் பயிற்சியும் செய்ய முடியவில்லை. 2022ம் ஆண்டில் உக்ரைன் ரஷ்யா போரின்போது,உக்ரைன் நாட்டுக்கு அதிகளவு ஆயுதங்களை வழங்கியது பாகிஸ்தான் ராணுவத்த யாரிப்பு கூடம்தான். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஆயுதங்களை விற்பனை செய்து பொருளாதார சிக்கல்களை தீர்த்துக்கொண்டது.

2022-23ல் மட்டும் பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்கள், தளவாடங்கள் 41.50 கோடி டாலருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது, இது 2021-22ல்1.30 கோடி டாலராக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. ஏறக்குறைய ஓர் ஆண்டுக்குள் உக்ரைன்-ரஷ்யா போர் பதற்றத்தில் பாகிஸ்தான் ஆயுதங்கள் ஏற்றுமதி 3000 மடங்குஅதிகரித்து லாபம் ஈட்டியுள்ளது.

2023, பிப்ரவரி, மார்ச் மாதத்தில் மட்டும் பாகிஸ்தான் 42 ஆயிரம் 122எம்எம் பிம்-21 ராக்கெட்டுகள், 60000 155எம்எம் ஹவிட்சர்ஸ் வெடிகுண்டுகள், 1.30 லட்சம் 12எம்எம் ராக்கெட்டுகளை ஏற்றுமதி செய்துள்ளது.இதன் மூலம் ஒரு மாதத்தில் மட்டும் 34.60 கோடி டாலர் லாபம் ஈட்டியுள்ளது.

இந்த ஆயுதங்கள் விற்பனை செய்வதால் கிடைக்கும் நிதியில் 80 சதவீதம் ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமை அலுவலகத்துக்கு சென்றுவிடும். ஆயுதங்கள் விற்பனையில் பெரும்பகுதி பணத்தை ராணுவம் வைத்துக்கொள்கிறது, இந்த விவரங்கள் பாகிஸ்தான் மக்களுக்கு தெரிவதில்லை. பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகள், முக்கியமான வெடிமருந்துகளின் பற்றாக்குறை குறித்து நேற்று நடந்த சிறப்புப் படைத் தளபதிகள் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது, அப்போது, ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வா “ இந்தியாவுடன் நீண்டகாலபோரில்ல் ஈடுபட பாகிஸ்தானிடம் வெடிமருந்துகளும், ஆயுதங்களும், தளவாடங்களும், பொருளாதார பலமும் இல்லை” என வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டார்.

பாகிஸ்தான் உளவுத்துறை தகவலின்படி, இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டால் அந்த தீவிரமான போரில் 4 நாட்கள் மட்டுமே முழுமையாக சமாளி்க்கும் வகையில் அனைத்து வகையான ஆயுதங்களையும் பாகிஸ்தான் கையிருப்பு வைத்துள்ளது. அதன்பின் பாகிஸ்தான் ராணுவத்தின் நிலைமை கவலைக்கிடம்தான் என்று செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
 

இதையும் படிங்க: இந்தியாவை சீண்டும் பாகிஸ்தான்.. போர் பதற்றத்திற்கு மத்தியில் ஏவுகணை சோதனை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share