×
 

எல்லையில் தொடரும் பதற்றம்... சுத்துப்போட்டு தூக்கப்பட்ட பாகிஸ்தான் ரேஞ்சர் !!

இந்தியா பாகிஸ்தான் எல்லையில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ரேஞ்சர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. குழந்தைகள் மற்றும் பெண்களைத் தவிர்த்துவிட்டு ஆண்களைக் குறிவைத்துத் தாக்கியுள்ளனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தத் தாக்குதலால் காஷ்மீரில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பும் எல்லையில் பாதுகாப்பை அதிகரித்துள்ளது. இதனிடையே ராஜஸ்தானில் உள்ள இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நேற்று பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ரேஞ்சர் ஒருவர் ஊடுருவ முயன்றுள்ளார். இதைச் சரியாகக் கவனித்த எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி அவரை கைது செய்தார். உளவு பார்க்கும் நோக்கத்துடன் அந்த ரேஞ்சர் இந்தியாவில் ஊடுருவியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. 

இதையும் படிங்க: மெயின் பியூஸை பிடுங்கிய இந்தியா... ஊசலாடும் பாகிஸ்தான் பொருளாதாரம்!!

பாகிஸ்தானின் துணை ராணுவப் படையைச் சேர்ந்த அந்த நபர் முகமது ஹுசைன் என்ற ரேஞ்சர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் பஹாவல்பூர் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தற்போது ராஜஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் பிஎஸ்எஃப் படையில் பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது.. அவர் எதற்காக இந்தியாவுக்குள் நுழைந்தார் என்பதை கண்டறிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். முன்னதாக கடந்த சனிக்கிழமையும் இதேபோன்ற சம்பவம் நடந்தது.

ராஜஸ்தானில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் மற்றொரு பாகிஸ்தான் ரேஞ்சர் கைது செய்யப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பஞ்சாப்பில் உள்ள சர்வதேச எல்லையில் நமது பிஎஸ்எஃப் ஜவான் பூர்ணம் குமார் ஷா தெரியாமல் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தார். அவரை விடுவிக்க இந்தியா வலியுறுத்திய போதிலும் பாகிஸ்தான் விடுவிக்க மறுத்துவிட்டது. இந்தச் சூழலில் தான் பாகிஸ்தான் ரேஞ்சர்கள் அடுத்தடுத்த இருவர் இந்தியாவில் ஊடுருவ முயன்றதில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: நிலத்தடி பங்கரில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டு.. மீண்டும் உச்சகட்ட பதற்றம்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share