#BREAKING: MODI SIR.. NO SIR.. நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட்டம்..!
பீகார் வாக்காளர் அட்டை சிறப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் ஆகஸ்ட் 21-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கூட்டத்தொடரின் போது பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்க்கட்சி உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதல் தொடர்பாக மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக விவரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
மழைக்கால கூட்டத்தோடு தொடங்கிய முதல் நாளிலேயே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் மீண்டும் இன்று மக்களவை கூடிய போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டன. இதனால் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தில் வாக்காளர் சிறப்பு திருத்தத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் எம்பிகள் கனிமொழி, அகிலேஷ் யாதவ், டி.ஆர் பாலு உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கலந்து கொண்டனர். மோடி சார், நோ சார் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கண்டன முழக்கங்களை எழுப்பினர். வாக்காளர் சிறப்பு திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: மழைக்கால கூட்டத்தொடர் 2ஆம் நாள் அமர்வு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு...
தேர்தல் ஆணைய நடவடிக்கை ஜனநாயக படுகொலை என்ற குற்றம் சாட்டியுள்ள எதிர்கட்சிகள், ஆதார், ரேஷன் அட்டையை குடியுரிமை ஆவணங்களாக இருக்க தேர்தல் ஆணையம் மறுத்துள்ளதாகவும், குடியுரிமை ஆவணங்கள் இல்லையெனில் பெற்றோரை ஆவணங்கள் கேட்பதால் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். வாக்காளர் சிறப்பு திருத்தம் NRC- ஐ திணிக்கும் முயற்சி என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். இதனிடையே நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எந்த கேள்விக்கும் பதில் சொல்ல மாட்டாரு.. பிரதமரின் உரை குறித்து டி.கே.எஸ். இளங்கோவன் விமர்சனம்..!