×
 

படம் போட்டு காட்டிய இந்தியா... ஆதரத்தோடு சிக்கிய பாகிஸ்தான்; இப்போ என்ன சொல்ல போறீங்க?

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளுக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் உள்ள தொடர்பை உறுதிப்படுத்தும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன.  பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி தருவது தொடர்பாக அனைத்து முடிவுகளையும் எடுக்க ராணுவத்திற்குப் பிரதமர் முழுச் சுதந்திரத்தை அளித்திருந்தார். இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது. இந்த சூழலில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் இதில் 100 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டனர். இந்த நிலையில் பாகிஸ்தான் இந்தியாவில் 15 முக்கிய நகரங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்த திட்டமிட்டது. இந்த ஏவுகணை தாக்குதல்களை இந்திய பாதுகாப்பு படை முறியடித்துள்ளது. இதையடுத்து மீண்டும் நம் நாடு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க தொடங்கி உள்ளது. அதன்படி சீனா தயாரிப்பான எச்க்யூ 9 ஏவுகணை தடுப்பு சிஸ்டம் பாகிஸ்தானின் லாகூரில் நிறுவப்பட்டு இருந்தது. இதனை இஸ்ரேல் நாட்டின் தயாரிக்கப்பட்ட HAROP ட்ரோன்கள் மூலம் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பாக். சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி மைதானத்தில் தாக்குதல்... வீரர்களின் உயிர்களுக்கு சிக்கல்!!

இந்த தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.  இதை அடுத்து இந்தியாவும் பாகிஸ்தானின் பல்வேறு இடங்களில் ட்ரோன் தாக்குதலை நம் நாடு மேற்கொண்டு வருகிறது. இதனால் பாகிஸ்தான் நடுங்கிப்போய் உள்ளது. இதனிடையே இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆபரேஷன் சிந்தூர் மூலம் கொல்லப்பட்ட நபர்கள் பயங்கரவாதிகள். ஆனால் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு செய்கிறது. இது பாகிஸ்தானில் ஒரு நடைமுறையாக இருக்கலாம்.

பாகிஸ்தானில் நேற்று பயங்கரவாதிகளின் இறுதி சடங்கில் ராணுவ அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி இந்தியாவின் தாக்குதலில் பலியான பயங்கரவாதிகளின் இறுதி சடங்கில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பங்கேற்று இருப்பது, இறந்தவர்களின் சவப்பெட்டியில் பாகிஸ்தான் கொடி போர்த்தி இருக்கும் புகைப்படங்களை அவர் செய்தியாளர்களுக்கு காண்பித்தார். இதன் மூலம் பாகிஸ்தான் அரசுக்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பது உறுதியாகியுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அவர்கள் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆபரேஷன் சிந்தூரில் அப்துல் அசார் பலி; யார் இவர்? எந்த சம்பவத்தில் தொடர்புடையவர்?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share