×
 

மோடி ஜி பிரஸ்மீட்டுக்கு ரெடியா? ராகுல் வீடியோவை பகிர்ந்து நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி

ராகுல் காந்தி வெளியிட்ட வாக்குத்திருட்டு தொடர்பான வீடியோவை பகிர்ந்துள்ள நடிகர் பிரகாஷ்ராஜ் பிரதமர் மோடிக்கு பல்வேறு கேள்விகளை முன் வைத்தார்.

தேர்தல் ஆணையத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் வாக்குகள் திருடப்படுவதாகவும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 

போலி வாக்காளர்கள் பட்டியலில் இணைக்கப்படுவதாக ராகுல் காந்தி சந்தேகத்தை முன் வைத்துள்ளார். கருத்துக்கணிப்புகளுக்கும் தீர்வு முடிவுகளுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இந்தியாவில் திடீர் திடீரென தேர்தல் தேதிகள் மாற்றப்படுவது சந்தேகத்தை அதிகரிப்பதாகவும் குறிப்பிட்டார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாகவும் கூறினார். மேலும் பாஜக நடத்தும் தேர்தல் முறைகேடுகளுக்கு தேர்தல் ஆணையம் துணை போவதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

இதையும் படிங்க: காலம் மாறும்.. தரமான சம்பவம் இருக்கு! தேர்தல் ஆணையத்துக்கு ராகுல் காந்தி பகிரங்க எச்சரிக்கை..!

வாக்களித்த வாக்காளர்களின் விவரங்கள் பூத் வீடியோ பதிவுகளை தேர்தல் ஆணையம் வழங்க மறுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி, மின்னணு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வழங்கினால் 30 வினாடிகளில் மோசடியை கண்டறியலாம் என்று தெரிவித்தார். 

மேலும் வாக்கு திருட்டு தொடர்பாக ராகுல் காந்தி வீடியோவையும் வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், வாக்கு திருட்டு தொடர்பான ராகுல் காந்தியின் வீடியோவை நடிகர் பிரகாஷ்ராஜ் பகிர்ந்து உள்ளார்.

அவர் பிரதமர் மோடிக்கு பல்வேறு கேள்விகளை முன் வைத்துள்ளார். ஒவ்வொரு தேச பக்தரான இந்தியரும் இதை பார்க்குமாறு கேட்டுக் கொள்வதாகவும் நாட்டின் ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதாகவும் கூறினார். 

நமது குரல் திருடப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டிக் கொள்ள பிரகாஷ்ராஜ் இது மிக தீவிர குற்ற செயல் என்றும் தெரிவித்தார் 

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இவற்றை ஆதாரத்துடன் முன் வைத்துள்ளதாக குறிப்பிட்ட பிரகாஷ்ராஜ், முதன்முறை என்ற போதிலும் இந்த முறை பிரதமர் மோடி பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி விளக்கம் அளிப்பாரா என்றும் கேள்வி எழுப்பினார். நாடு இதனைத் தெரிந்து கொள்ள விரும்புவதாகவும் பிரகாஷ்ராஜ் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: ரெண்டு EPIC நம்பர் இருந்தா யார் தப்பு? நியாயத்த சொல்லுங்க! தேஜஸ்வி யாதவ் கேள்வி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share