×
 

#BREAKING சுதந்திர தினத்தில் ஒலித்த ‘வந்தே மாதரம்’... செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி...!

சுதந்திர தினத்தையொட்டி, செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியகொடியேற்றினார்.

நாட்டின் 80-ஆவது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி டெல்லியில் ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் மோடி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அதனையடுத்து செங்கோட்டைக்கு வந்தடைந்த பிரதமர் மோடியை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றார்.  செங்கோட்டையில் உள்ள கடமைப்பாதையில் முப்படையினர் மற்றும் காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை வழங்கினர். 

இன்றைய தினம் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றினார். 21 குண்டுகள் முழங்க பிரதமர் தேசியக் கொடியை ஏற்றினார். பிரதமர் மோடி தேசிய கொடியேற்றிய தருணம் ராணுவ ஹெலிகாப்டர் மூலமாக மலர் மழை பொழியப்பட்டது. 

சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி செங்கோட்டையில் கொடியேற்றுவதற்கு முன்னதாக வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டது. மத்திய அரசின் அரசாணையைத் தொடர்ந்து செங்கோட்டையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல் முறையாக வந்தே மாதரம் பாடம் ஒலிக்கப்பட்டது. வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டை முன்னிட்டு மத்திய அரசு சிறப்பு ஏற்பாடு செய்திருந்தது. 

இதற்கு முன்னதாக நாட்டு மக்களுக்கு 80வது சுதந்திர தின வாழ்த்துக்களை பகிர்ந்த பிரதமர் மோடி, தனது எக்ஸ் தள பக்கத்தில், “சுதந்திர தின நல்வாழ்த்துகள். காலனித்துவ ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதில் முக்கிய பங்காற்றிய எண்ணற்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் துணிச்சல், தியாகம் மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு உணர்வை நன்றியுடன் நினைவுகூர்கிறோம்.

'விக்சித் பாரத்' (வளர்ச்சியடைந்த இந்தியா) எனும் இலக்கை நோக்கி நாம் ஒன்றிணைந்து பயணிக்கும் வேளையில், அவர்களின் கனவுகள் நமக்குத் தொடர்ந்து ஊக்கம் கொடுக்கின்றன. 140 கோடி இந்தியர்களின் பங்களிப்புடன், நமது நாடு பல்வேறு துறைகளிலும் வளர்ச்சியின் புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. வரும் காலங்களிலும் இந்தப் பயணம் இன்னும் வேகமான முன்னேற்றத்துடன் தொடரட்டும்” என்று  பதிவிட்டிருக்கிறார்.

இதையும் படிங்க: உலகின் 60% ஆசிய யானைகள் இந்தியாவில் உள்ளன! உலக யானைகள் தினத்தில் பிரதமர் மோடி வாழ்த்து!

இதையும் படிங்க: ரீல்ஸ் உலகம் உங்களை ஏமாற்றிவிடும்! இளைஞர்களுக்கு பிரதமர் மோடி கொடுத்த ஸ்ட்ராங் அட்வைஸ்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share