×
 

நம்பர் 1 இந்திய பிரதமர்!! புதிய சரித்திரம் படைத்தார் மோடி! உலகத் தலைவர்கள் பாராட்டு!

இந்தியாவில் நீண்ட காலம் பிரதமர் ஆக பதவி வகித்தவர் என சாதனை படைத்துள்ள பிரதமர் மோடிக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

இந்தியாவின் நீண்ட காலம் பதவி வகித்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்ற புதிய சாதனையை படைத்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வெளியிட்டுள்ள பாராட்டு செய்திகள் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளன.

பிரதமர் மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு மே 26 ஆம் தேதி பதவியேற்றார். அதன்பின்னர் தொடர்ந்து பிரதமராக இருந்து வரும் அவர், இன்றுடன் 4,399 நாட்கள் அந்த பொறுப்பில் பணியாற்றியுள்ளார். இதன்மூலம் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் 4,398 நாட்கள் என்ற சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளார்.

இந்த சாதனையை முன்னிட்டு உலக தலைவர்கள் பலரும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்தியாவின் நீண்ட காலம் பதவி வகித்த பிரதமராக சாதனை படைத்துள்ள மோடிக்கு தனது பாராட்டுகளை தெரிவித்தார். சமீபத்தில் ரோம் நகரில் அவரை சந்தித்தது மகிழ்ச்சியான அனுபவம் என்றும், இந்தியா-இத்தாலி உறவை மேலும் வலுப்படுத்தும் முயற்சிகளில் இணைந்து செயல்படுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு கிடைத்த சிறப்பு கவுரவம்!! மத்திய அமைச்சரவை எழுந்து நின்று கைத்தட்டி பாராட்டு!!

இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்கே தனது வாழ்த்து செய்தியில், இந்திய வரலாற்றில் நீண்ட காலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக திகழும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்தியாவுடனான நெருங்கிய நட்புறவை இலங்கை மதிப்பதாகவும், இரு நாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்த ஆவலுடன் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

டிரினிடாட் மற்றும் டொபாகோ பிரதமர் கமலா பெர்சாத் பிசெசர், உலக அரங்கில் இந்தியாவின் செல்வாக்கை உயர்த்திய தலைவராக மோடியை பாராட்டியுள்ளார். சாதாரண குடும்பத்தில் இருந்து நாட்டின் உயர்ந்த பதவியை அடைந்து, 140 கோடி மக்களை வழிநடத்தி வருவது குறிப்பிடத்தக்க சாதனை என அவர் தெரிவித்துள்ளார்.

பப்புவா நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராபே வெளியிட்ட வீடியோவில், மோடி தனது அரசியல் மற்றும் நிர்வாக வாழ்க்கையின் முன்மாதிரி தலைவர் என்று புகழ்ந்துள்ளார். உலகளவில் பல தலைவர்களுக்கு ஊக்கமளிக்கும் தலைமைத்துவத்தை மோடி வெளிப்படுத்தி வருகிறார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், மத்திய அமைச்சரவை கூட்டத்திலும் பிரதமர் மோடிக்கு சிறப்பு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அமைச்சர்கள் எழுந்து நின்று கரவொலி எழுப்பி வாழ்த்து தெரிவித்ததுடன், அவரது சாதனையை பாராட்டி சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

உலக தலைவர்களின் பாராட்டுகளும், சர்வதேச அளவில் கிடைத்துள்ள அங்கீகாரமும், பிரதமர் மோடியின் இந்த சாதனையை மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற்றியுள்ளது.

இதையும் படிங்க: பிரதமர் மோடி ஒருவார பயணம்! ஜி 7 மாநாட்டில் பங்கேற்பு! 1993-க்கு பிறகு முதன்முறை நடக்கும் சம்பவம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share