×
 

கலாசாரம், பாரம்பரியத்தை அவமதிக்கிறார்கள்?! ராகுல்காந்தி தண்டிக்கப்பட வேண்டாமா? மோடி ஆவேசம்!

நமது கலாசாரம், பாரம்பரியத்தை அவமதிப்பவர்கள் தேர்தலில் தண்டிக்கப்பட வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

பீஹார் சட்டமன்றத் தேர்தலில் என்.டி.ஏ. கூட்டணியின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில், சீதாமர்ஹி மாவட்டத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். “நமது கலாசாரம், பாரம்பரியத்தை அவமதிப்பவர்கள் தேர்தலில் தண்டிக்கப்பட வேண்டும். 

சாத் பண்டிகையை ‘நாடகம்’ எனக் கூறி ராகுல் காந்தி பீஹார் பெண்களின் நம்பிக்கையை அவமதித்துள்ளார். மகா கும்பமேளா, அயோத்தி ராமர் கோயிலை அவமதித்தவர்கள் ஓட்டு வங்கி அரசியலால் வழிநடத்தப்படுகின்றனர். இவர்களால் மாநிலத்திற்கு நல்லது செய்ய முடியாது” என எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். முதல் கட்டத் தேர்தலில் அதிக வாக்குப் பதிவு என்.டி.ஏ.வுக்கு ஆதரவு எனவும் தெரிவித்தார்.

பீஹார் மக்கள் ஆர்.ஜே.டி. தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணியை விரும்பவில்லை எனக் கூறிய பிரதமர், “தேஜ கூட்டணி ஊழலை நிராகரிக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன் நடைபெற்ற முதல் கட்டத் தேர்தலில் அதிக வாக்காளர்கள் ஓட்டளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எதிர்க்கட்சிகளுக்கு நீங்கள் பெரிய அதிர்ச்சி கொடுத்துவிட்டீர்கள். அவர்கள் தூக்கமில்லாத இரவுகளைக் கழிக்கின்றனர். அதிக ஓட்டுப்பதிவு தேஜ கூட்டணிக்கு அபரிமிதமான ஆதரவைக் குறிக்கிறது” என்றார்.

இதையும் படிங்க: பீகார் முதற்கட்ட பிரசாரம் இன்றுடன் ஓய்வு! தலைவர்கள் அனல் பேச்சு! பத்திக்கிச்சு தேர்தல் ஜுரம்!

மத்திய அரசின் சாதனைகளை விவரித்த பிரதமர், “ஒரு மாதத்திற்கு முன் தொடங்கிய திட்டத்தின் கீழ், ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கு தலா ரூ.10,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. காட்டாட்சி ராஜ்ஜியத்தின் கீழ் இது ஒருபோதும் சாத்தியமில்லை” எனக் கூறினார். 

ராகுல் காந்தியை நேரடியாக விமர்சித்த அவர், “சாத் பண்டிகையை ஒரு நாடகம் என்று கூறி, பீஹார் பெண்களின் நம்பிக்கையை ராகுல் அவமதித்துள்ளார். இது எங்கள் உணர்வுகளுக்கு அவமதிப்பு இல்லையா? அவர்கள் தண்டிக்கப்பட வேண்டாமா?” எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும், “மகா கும்பமேளா மற்றும் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலை அவமதித்துள்ளனர். நமது கலாசாரம், பாரம்பரியத்தை அவமதிப்பவர்கள் தேர்தலில் தண்டிக்கப்பட வேண்டும். ஆர்.ஜே.டி.-காங்கிரஸ் கூட்டணி, ஓட்டு வங்கி அரசியலின் காரணமாக அயோத்தி ராமர் கோயில் உள்ளிட்ட பல ஆலயங்களைப் புறக்கணித்துள்ளது. ஓட்டு வங்கி அரசியலால் வழிநடத்தப்படுபவர்களால் மாநிலத்திற்கு நல்லது செய்ய முடியாது. அவர்களின் ஓட்டு வங்கி அரசியல் ஊடுருவல்காரர்களைப் பாதுகாக்க வழிவகுக்கிறது” எனக் குற்றம்சாட்டினார்.

என்.டி.ஏ. (பா.ஜ.க., ஜே.டி.யு., எல்.ஜே.பி.) மீண்டும் ஆட்சி அமைக்கும் என பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். இந்தப் பிரசாரம், பீஹார் அரசியலில் கலாசாரம், பாரம்பரியம், ஓட்டு வங்கி அரசியல் ஆகியவற்றை மையப்படுத்தியது.

இதையும் படிங்க: தேதி குறிச்சாச்சு! டிச.,1ம் தேதி துவங்குகிறது பார்லி குளிர்கால கூட்டத் தொடர்! அனல் பறக்கும் விவாதம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share