×
 

உத்தரபிரதேசத்திற்கு எதிராக செயல்படுகிறது திமுக!! அதிக தொகுதிகள் கிடைக்கக்கூடாது என எதிர்ப்பதாக மோடி குற்றச்சாட்டு!

உத்தர பிரதேசத்திற்கு எதிராக தி.மு.க. செயல்படுகிறது. உத்தர பிரதேசத்தை இழிவுபடுத்தி அதன் மூலம் தி.மு.க. அரசியல் ஆதாயம் தேடுகிறது என பிரதமர் மோடி கூறினார்.

உத்தர பிரதேசத்தின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் முக்கிய மைல்கல்லாக கருதப்படும் கங்கை விரைவுச் சாலையை பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) இன்று திறந்து வைத்தார். மீரட் (Meerut0 முதல் பிரயாக் ராஜ் (Prayagraj) வரை 594 கிலோமீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த விரைவுச்சாலை, மாநிலத்தின் மிக நீளமான சாலை திட்டமாகும்.

இந்த திட்டம், உத்தர பிரதேசத்தின் மேற்கு, மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள 12 மாவட்டங்களை இணைக்கிறது. இதன் மூலம் பயண நேரம் கணிசமாக குறையும் என்பதுடன், டெல்லி மற்றும் பிற முக்கிய நகரங்களுடன் போக்குவரத்து இணைப்பு மேலும் மேம்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பொருளாதார வளர்ச்சி, தொழில் முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

திறப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி, “கங்கை நதி மாநிலத்திற்கு உயிர் ஆதாரமாக இருப்பதைப் போல, இந்த விரைவுச்சாலை வளர்ச்சிக்கான முக்கிய ஆதாரமாக இருக்கும்” என்று குறிப்பிட்டார். மேலும், மேற்குவங்கத்தில் நடைபெற்ற தேர்தலில் மக்கள் அச்சமின்றி வாக்களித்தது ஜனநாயகத்தின் வலிமையை காட்டுவதாகவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: மே 4 ரிசல்ட் வளர்ந்த இந்தியா கனவை மேலும் வலுப்பட்டுத்தும்!! உ.பி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உறுதி!

அதேவேளை, சமீபத்திய அரசியல் நிலவரங்களையும் அவர் தொடக்கமாக எடுத்துரைத்தார். குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க. பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியதை சுட்டிக்காட்டிய அவர், பீகார் சட்டமன்றத் தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதாக நினைவூட்டினார். வரவிருக்கும் ஐந்து மாநில தேர்தல்களிலும் பா.ஜ.க. தொடர்ச்சியான வெற்றியைப் பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இதனுடன், திமுக 9Dravida Munnetra Kazhagam) மற்றும் சமாஜ்வாடி (Samajwadi Party) மீது அவர் விமர்சனங்களையும் முன்வைத்தார். உத்தர பிரதேசத்திற்கு எதிராக செயல்படுகின்றன என்றும், மாநிலத்தின் அரசியல் முக்கியத்துவத்தை குறைக்க முயல்கின்றன என்றும் குற்றம்சாட்டினார். இந்த கருத்துக்கள், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழ்நிலையை மேலும் சூடுபடுத்தியுள்ளது.

மொத்தத்தில், கங்கை விரைவுச்சாலை திறப்பு வளர்ச்சி திட்டமாக மட்டுமின்றி, அரசியல் பேச்சுகளுக்கும் மேடையாக மாறியுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

இதையும் படிங்க: கொல்கத்தா காளிக்கு பூஜை செய்த மோடி!! மேற்குவங்கத்தில் ரோடு ஷோ!! தேர்தல் விறுவிறு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share