டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம்: மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை...!
தற்பொழுது பாதுகாப்பு தொடர்பான முக்கிய ஆலோசனை கூட்டத்தை கூட்டி பிரதமர் மோடி ஆலோசித்து வருகிறார்.
டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக முக்கிய ஆலோசனையானது தற்போது தொடங்கியிருக்கிறது. பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டமானது தற்போது தொடங்கியிருக்கிறது. கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளதாக தகவலானது வெளியாகி இருக்கிறது.
நேற்று முன்தினம் டெல்லி செங்கோட்டை வாயில் அருகே ஒரு பயங்கர குண்டு வெடி சம்பவமானதுநிகழ்த்தப்பட்டிருக்கிறது. இது மிகப்பெரிய சதி செயலாக நாடு முழுவதும் எதிர்பார்க்கக்கூடிய சூழலில் இந்த சதி செயல் தொடர்பான பாதுகாப்பு அம்சங்களை விவாதிப்பதற்கான ஒரு முக்கிய ஆலோசனை கூட்டம் டெல்லியில் பிரதமர் தலைமையிலான அமைச்சர் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
இன்று மாலை 5:30 மணி அளவில் பிரதமர் தலைமையில் இந்த கூட்டம் அங்கு கூடியிருக்கிறது. நாட்டினுடைய பாதுகாப்பு தொடர்பாக பல முக்கியமான ஆலோசனைகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்படலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: பாஜகவுக்கு ஆதரவாக SIR பணிகள்... ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய காங். MLA...!
அதேபோன்று இந்த சதி செயலை பொறுத்தவரையிலும் தொடக்கத்தில் இருந்தே விசாரணை மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தை விசாரிப்பதற்காக 10 பேர் கொண்ட புலனாய்வு குழுவினர் அமைக்கப்பட்டுள்ளனர். அந்த புலனாய்வு குழு முதற்கட்ட விசாரணை அறிக்கையை பிரதமர் மோடியிடம் கொடுத்திருக்கிறார்கள்.
குறிப்பாக பிரதமர் மோடி இரண்டு நாட்கள் பூட்டானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கிருந்து தனது பயணத்தை நிறைவு செய்ததற்கு பிறகாக இன்றைய தினம் நாடு திரும்பி இருந்தார். நாடு திரும்பிய உடனே இந்த சதி செயலால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய அப்பாவி.மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தது மட்டுமில்லாமல் அவர்களுடன் இந்த நாடும் இந்த தேசமும் துணை நிற்கிறது என்பதை தெரிவித்தார்.
மேலும் இந்த நாசகர செயலில் ஈடுபட்ட ஒருவரையும் தான் ஒருபோதும் சும்மா விட போவதில்லை. மேலும் இதற்கு தக்க பாடம் புகட்டவும், பயங்கரவாதத்தை இந்தியாவிலிருந்து வேறுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு முழு மேற்கொண்டு வருகிறது என்ற உத்தரவாதத்தையும் அவர்களை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி கொடுத்திருந்தார்.
அதனை தொடர்ந்து தற்பொழுது பாதுகாப்பு தொடர்பான முக்கிய ஆலோசனை கூட்டத்தை கூட்டி பிரதமர் மோடி ஆலோசித்து வருகிறார். மேலும் இந்த முதற்கட்ட விசாரணை அறிக்கை அந்த 10 பேர் கொண்ட குழு கொடுத்திருக்கக்கூடிய சூழலில், அது தொடர்பான கருத்துக்களையும் அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் பகிர்ந்து கொள்வார் என்றும், அது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசித்து மிக முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய ராணுவம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக மேற்கொண்ட ஆப்ரேஷன் செந்தூர் என்பதற்கு பதிலடியாக ஜெய்ஷ் இ முகமது அமைப்பு இதுபோன்ற ஒரு நாசகர செயலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகப்படுகிறது.
இந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தி இருக்கக்கூடிய பயங்கரவாதி மருத்துவர் உமர் உடன் தொடர்பில் இருக்கக்கூடிய கூட்டாளிகள் இருவரும் துருக்கி நாட்டிற்கு சென்று அங்குள்ள ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த உளவாளிவருடன் தொடர்பில் இருந்ததாகவும் அந்த ஏஜென்ட் கொடுத்தக்கூடிய அடிப்படை தகவல் அடிப்படையில் தான் இவர்கள் இந்தியாவிற்குள்ளாக நாசகர செயலை செய்வதற்காக வெடி பொருட்களை சேகரித்து வைத்ததும் விசாரணையில் அம்பலமானது.
அதுமட்டுமில்லாமல் இவர்கள் பல இடங்களில் இதுபோல் குண்டு வெடிப்புகளை நிகழ்த்த திட்டமிட்டுருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கீழடி TO வாக்குத் திருட்டு... என்ன ஆணவம் இருக்கும்? மத்திய பாஜக அரசை கேள்விகளால் துளைத்த முதல்வர் ஸ்டாலின்...!